Tuesday 2 March 2010

* இலங்கை பங்கு சந்தையில் கணக்கிடப்படும் பிரதான விலைச்சுட்டிகள்.

கொழும்பு பங்குச்சந்தையினால் இரு பிரதான விலைச்சுட்டிகள் பிரசுரிக்கப்படுகின்றன. அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியும் (ASPI-All Share Price Index) மிலங்க விலைச்சுட்டியும் (Milanka Price Index -MPI) இரு பிரதான விலைச்சுட்டிகளாகும்.



இவ்விரண்டு விலைச் சுட்டிகளும் நிறையிடப்பட்ட பங்கு விலைச்சுட்டிகளாகும்.இவைகள் பற்றிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துக் கம்பனிகளின்
மொத்த சந்தை முதலாக்கற் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப்
பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)
தயாரிக்கப்படுகின்றது.

பங்குச்சந்தையின் பங்குகளின் மொத்த விலையை அளவிடுவதற்கு
பயன்படுத்தப்படும் ஓரே அளவீடாக இச்சுட்டி காணப்படுகின்றது.1985 ஆம்
ஆண்டின் ஆரம்பத்தில் மொத்த சந்தை முதலாக்கற் பெறுமதியை அடிப்பருவ பெறுமான
மாகவும் 100 ஐ அடிப்பருவச் சுட்டியாகவும் வைத்து இச்சுட்டி
தயாரிக்கப்பட்டுள்ளது.1985 ஐனவரி 2ஆந் திகதி முதல் ஒவ்வொரு தினத்திற்கும்
இச்சுட்டி கணிக்கப்பட்டு வருகின்றது.

மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI)

1999 ஐனவரி 4 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சுட்டி மூலம் கொழும்பு
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள விசாலத்தன்மையும் மிகத்
திரவத்தன்மையும் வாய்ந்த 25 கம்பனிகளது பங்குகளின் விலை மட்டங்கள்
அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கம்பனியொன்றின் விசாலத்தன்மையை (Size) அதன் சந்தை முதலாக்கலை அளவிடுவதன்
மூலம் கணிக்கலாம்.அக் கம்பனியின் திரவத்தன்மையானது (Liquidity) கைமாற்றம்
செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையும் பங்குகளின் பெறுமதியும் சந்தை
மூலதனத்தின் சதவீதமாகக் கணிக்கப்படுகின்றது.

மிலங்க விலைச்சுட்டியின் அடிப்பருவம் 1998 டிசம்பர் 31 ஆகவும்,அதன்
அடிப்பருவச் சுட்டி 1000 ஆகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.மி
லங்க
விலைச்சுட்டியை கணிப்பதற்கு கொழும்பு பங்குச் சந்தையானது ஒவ்வொரு
காலாண்டும் அதனுள் உள்ளடக்கப்பட்ட வேண்டிய கம்பனிகளை தெரிவு செய்து
கொள்கின்றது.

June 30, 2010 வரை மிலங்க விலைச்சுட்டியில் (Milanka Price Index -MPI) பட்டியலிடப்பட்டுள்ள 25 கம்பனிகள்.

*BANKS, FINANCE & INSURANCE

Ceylinco Insurance Co. PLC

Commercial Bank of Ceylon PLC

DFCC Bank

Hatton National Bank PLC

National Development Bank PLC

Nations Trust Bank PLC

Sampath Bank PLC

Seylan Bank PLC


*HOTELS & TRAVELS

Asia Hotels and Properties PLC

Hotel Services (Ceylon) PLC

John Keells Hotels PLC


*LAND & PROPERTY

Overseas Realty (Ceylon) PLC


**POWER & ENERGY

Lanka IOC PLC


*CHEMICALS & PHARMACEUTICALS

Chemical Industries (Colombo) PLC


*CONSTRUCTION & ENGINEERING

Colombo Dockyard PLC


*TRADING

Brown & Co. PLC

C.W. Mackie PLC

Environmental Resources Investments PLC


*BEVERAGE, FOOD & TOBACCO

Ceylon Tobacco Co. PLC

Distilleries Company of Sri Lanka PLC


*DIVERSIFIED

Aitken Spence & Co. PLC

John Keells Holdings PLC

Richard Pieris PLC


*MANUFACTURING

Tokyo Cement Co. (Lanka) PLC


*TELECOMMUNICATIONS

Dialog Telekom PLC
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post.html"

No comments: