பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Sunday, 28 March 2010
* Clerk வேலைக்கு எஞ்ஜினியர் கேட்கும் டொயோட்டா!
டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 1376 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது.
ஆனால் முழுக்க முழுக்க தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களே வேண்டும் என அறிவித்துள்ளது.
1994-ம் ஆண்டு பெரும் சரிவுக்குப் பிறகு மீண்டு வந்த டொயோட்டா, படிப்படியாக மீண்டும் பணியாளர்களை நியமித்து பழைய பலத்துக்குத் திரும்பியது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக்கு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
கடந்த ஆண்டு நஷ்டத்தைச் சந்தித்த இந்த நிறுவனம், இந்த நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் லாபம் காட்டக் கூடும் என்று தெரிகிறது.
எனவே மீண்டும் புதிய பணியாளர் தேர்வைத் துவங்கியுள்ளது. ஆனால் சாதாரண நிர்வாகப் பிரிவு பணிக்கும் பொறியியல் படிப்பு முடித்தவர்களே வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்துள்ளது இந்த நிறுவனம்.
2010 நிதியாண்டில் 460 நிர்வாக ஊழியர்களும் (எஞ்ஜினியரிங்), டொயோட்டா பயிற்சி மையத்துக்கு 240 பயிற்றுநர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இனி நிர்வாகப் பணிகளுக்கும் பொறியியல் படித்தவர்களே வேண்டும் என பிற நிறுவனங்களும் கேட்க ஆரம்பித்தால், கலைப்பிரிவில் பயின்ற மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஜப்பானின் முன்னணி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/clerk.html"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment