Friday, 27 November 2009

* சர்வதேச நாணய நிதியத்திடம் 10 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியது இலங்கை மத்திய வங்கி

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை மத்திய வங்கி 10 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 375 மில்லியன் அமெரிக்க டொலர். அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகம் உள்ளது. இந்த சர்வதேச நாணய நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்புள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கு இந்த தங்கங்கள் நவம்பர் 23 ம் திகதி உலக தங்க மார்க்கெட்டில் விற்கும் விலையில் விற்பனை செய்யப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.இலங்கையிடம் ஏற்கெனவே 5.3 டன்கள் தங்கம் இருந்தது,இப்பொழுது அது 15.3 டன்களாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்று 1170 டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த மாதங்களில் இலங்கை மத்திய வங்கி, தங்கக் கொள்வனவு/விற்பனை என்ற விடயங்களை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/10.html"

No comments: