
முதலாவது LHCL இனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இலங்கையின் அப்பலோ ஹொஸ்பிடலை லங்கா ஹொஸ்பிடல் ஆக பெயரிட்டது. இவ் வைத்தியசாலை இதுவரை அப்பலோ என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராயல்ட்டி அடிப்படையில் கட்டணம் செலுத்திவந்தது.
LHCL இன் பங்குதாரராக இந்திய அப்பலோ நிறுவனம் இருந்தபோதும் அப்பங்குகளை இலங்கையின் வர்த்தக பெரும்புள்ளியான ஹரி ஜயவர்தன இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தினூடாக கொள்வனவு செய்திருந்தார்.
இரண்டாவது Distilleries Company of Sri Lanka (DCSL)ல் உள்ள முதலீட்டையும் வெகு விரைவில் விற்பனை செய்யவுள்ளதாக காப்புறுதி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மது ஓழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு அங்கமாகவே இதனை கொள்ள முடியும் என இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனதத்தின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.DCSLயின் 50% மேற்பட்ட் கட்டுப்பாட்டையும் வர்த்தக பெரும்புள்ளியான ஹரி ஜயவர்தன கொண்டுள்ளார்.
மேலும் காப்புறுதி கூட்டுத்தாபனம் DFCC,ASRI ஆகிய நிறுவனங்களிலும் முதலிட்டுள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_636.html"
No comments:
Post a Comment