Sunday 15 November 2009

* Blogல் வரவு-செலவு கணக்குகள்

இலங்கையை பொறுத்தவரை வருமானத்தைப் பற்றிய விபரங்களை கேட்பது தப்பு. இலங்கையர்கள் மட்டுமல்ல பெரும்பாலனவர்கள் தங்கள் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை. பல காரணங்கள்… திருஷ்டி பற்றிய பயத்திலிருந்து தாழ்வு மனப்பான்மை வரை.

சிலர் தங்களது வரவு செலவு கணக்குகளை உலகம் முழுதும் தெரியும்படி வலைத்தளங்களில் போடுகிறார்கள். இது ஒரு விதமான Public Relations Stunt. இது போல புதிதாக ஏதாவது செய்வதால் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. நிறைய விசிட்டர்கள் வருவதால் இந்த தளங்களின் விளம்பர வருமானங்களும் கூடுகின்றது.

இப்படிப்பட்ட வலைத்தளங்களில் சில:

http://www.mymoneyblog.com/

http://www.2millionblog.com/

இந்த வலைத்தளங்களை நடத்துபவர்களின் வரவு செலவு கணக்குகளை உங்களின் கணக்குகளோடு ஒப்பிட்டு பாருங்கள். Just for fun, also for some insights. பிறரின் தவறுகளிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம். அந்த மாதிரி பாடங்கள் வலி அதிகம் இல்லாதவை! இவர்களின் சாமர்த்தியமான முடிவுகளிலிருந்து நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்ளலாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog.html"

4 comments:

Admin said...

எப்படி எல்லாம் வலைப்பதிவு எழுதலாமோ. நம்ம வரவுசெலவை வலைப்பதிவில் போட்டால்.... சொல்ல விரும்பவில்லை.

பகிர்வுக்கு நன்றிகள்.

புல்லட் said...

உங்களுடைய பதிவுகள் நான் தினமும் பார்ப்பது ஒன்றாகிவிட்டது.. அசுர வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. ஆனால் பங்குச்சந்தை மிகவும் தளம்பலானது என்பதால் முழுமனதுடன் பரீட்சுத்து பார்க்கும் நிலையிலில்லை.. மேலம் உங்களுடைய பதிவுகள் பணம் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்துவதால் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்..

Atchuthan Srirangan said...

//நம்ம வரவுசெலவை வலைப்பதிவில் போட்டால்...//
ஒரு குடும்பத்தின் ஒரு மாத செலவு உங்கள் மாத செலவு........ ஹி ஹி...

சந்ரு அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//அசுர வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்//
உங்களைப் போன்ற அன்பான வாசகர்கள் இருப்பதாலேயே இது சாத்தியம்! ...

//ஆனால் பங்குச்சந்தை மிகவும் தளம்பலானது//

ஆனால் பங்குச்சந்தை சூதாட்டமில்லை

புல்லட் அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி