'பங்குச்சந்தை ஆலோசனை' என்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பங்கு சந்தை விழுந்திருக்கும் இச்சமயத்தில் பெரிய யோசனை சொல்ல போகிறார் என்று ஆர்வமாக மின்னஞ்சலை படித்தேன்.
அதில்....
ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.
ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.
ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.
ஆனால்,
ஒரு வருடம் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.
'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.
பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.
இப்போது இலங்கை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வேடிக்கை பார்ப்பது தான் நல்லது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_19.html"
No comments:
Post a Comment