இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.
பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.
1வது கட்டம் = 1 நெல்மணி
2வது கட்டம் = 2 நெல்மணி
3வது கட்டம் = 4 நெல்மணி
4வது கட்டம் = 16 நெல்மணி
5வது கட்டம் = 256 நெல்மணி
6வது கட்டம் = 65636 நெல்மணி
7வது கட்டம் = 4294967296 நெல்மணி
8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி
9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி
சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.
அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.
சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).
சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work
9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??
சும்மா கணக்கு போட்டு பாருங்க........
சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/power-of-accumulation.html"
2 comments:
Yes You Are Correct, Early Bird Picks the Warm..........
// நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).//
அட அட அட...WoW.. சூப்பர்ங்ணா..;)
//சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work
9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??
சும்மா கணக்கு போட்டு பாருங்க........//
LOL கணக்குப் போட்டாச்சு ஆனா விடைய சொன்னா மற்றவங்க கணக்குப் போடமாட்டாங்கல்ல..ஹிஹி
Post a Comment