இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 41474 கோடி ரூபா என நிதி அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கும் அரசாங்கம், வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதீட்டு துண்டு விழும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 7.5 வீதத்திற்கு குறைவாக அமையும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2010ம் ஆண்டுக்கான அரச வருமானம் 84781 கோடி ரூபா எனவும், அரச செலவு 126555 கோடி ரூபா எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையினை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்க உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:-தமிழ்வின்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/41474.html"
1 comment:
//வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையினை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்க
த்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது//
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்காமல் இருக்க என்ன செய்யலாம்?
Post a Comment