Sunday, 14 March 2010

* மைக்ரோசாப்ட் - யாஹூ இணைப்புச் சாதகமான முடிவு (Microsoft-Yahoo Deal)

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட் - யாஹூ இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தை ஒரு வழியாக சாதகமான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டுதான் முதல் முறையாக யாஹூவை வாங்கும் தன் விருப்பம் மற்றும் அதற்கான தொகை குறித்து அறிவித்தது மைக்ரோசாப்ட். ஆனால் அந்த ஆண்டு விஷயம் சாதகமான முடிவுக்கு வராததால், மீண்டும் 2007ம் ஆண்டு இதுகுறித்த பேச்சில் இறங்கியது. 2008ம் ஆண்டு யாஹூவின் பங்குகளுக்கு 47.5 பில்லியன் டொலர் வரை தர முன்வந்தது மைக்ரோசாப்ட்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை யாஹூ. பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2008ம் ஆண்டு மே மாதம் யாஹூவின் பங்குகள் விலை சரிந்து 33 டாலராகிவிட்டது. நேற்று யாஹூ பங்குகள் விலை மேலும் சரிந்து 16.32 டொலராகிவிட்டது.

இவர்களின் இந்த குழப்பமான நிலை கூகுளுக்கு பெரும் சாதகமாக அமைய, அசைக்க முடியாத பலத்துடன் முதலிடத்துக்கு வந்துவிட்டது கூகுள்.

இப்போது கூகுளை மிஞ்ச வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், யாஹூவும் மைக்ரோசாப்டும் மீண்டும் புதிய இணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. இதன்படி 10 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் கைகோர்த்து இயங்கும். அதன் மூலம் யாஹூ தேடியந்திரத்துக்கு கூடுதல் பலம் கிடைப்பதோடு, கூகுளுக்கு சரியான போட்டியாகவும் அமையும்.

இந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதில் தமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அமெரிக்க அரசும் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கூகுள் தேடியந்திரமே 3-ல் 2 பங்கு பயனாளர்களைக் கொண்டுள்ளது.

ஆனால் யாஹூவுக்கு 7.4 சதவீதமும் சீனாவின் பெய்டு தேடியந்திரத்துக்கு 7 சதவீகிதமும், மைக்ரோசாப்டின் பிங் சர்ச் என்ஜினுக்கு வெறும் 3.2 சதவீகிதமும் மட்டுமே பயனாளர்கள் உள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் அதிக பயன் யாஹூவுக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. முதல் 5 ஆண்டுகளுக்கு வரும் விளம்பர வருவாயில் 88 சதவீதம் யாஹூவுக்கே கிடைக்கும். தவிர, இந்த ஒப்பந்தத்துக்காக யாஹூவுக்கு 150 மில்லியன் டொலர்களை தருகிறது மைக்ரோசாப்ட். தவணை முறையில் இந்தத் தொகை தரப்படுமாம்.

தவிர, யாஹூவின் 400 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க பயனாளர்கள் யாஹூ தளத்தில் தேடத் துவங்கினால், அது தானாகவே மைக்ரோசாப்ட் தளத்துக்குப் போகும் அளவு வேலைகள் நடந்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹூ முழுமையாக மைக்ரோசாப்ட் கைக்குப் போய்விடும்.

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/microsoft-yahoo-deal.html"

6 comments:

mnalin said...

//10 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹூ முழுமையாக மைக்ரோசாப்ட் கைக்குப் போய்விடும்.//

mmmm........... :-) ;-) :-(

Medipir said...

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும். இவர்கள் இப்படி இணைந்து போட்டி போட்டால் தான் கணணி தொழில்நுட்பம் மேன்மேலும் அதி வேகமாக முன்னேறும் . நல்ல செய்தி நண்பரே

யோ வொய்ஸ் (யோகா) said...

nice to hear that

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

Anonymous said...

//இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க பயனாளர்கள் யாஹூ தளத்தில் தேடத் துவங்கினால், அது தானாகவே மைக்ரோசாப்ட் தளத்துக்குப் போகும் அளவு வேலைகள் நடந்து வருகின்றன//


//10 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹூ முழுமையாக மைக்ரோசாப்ட் கைக்குப் போய்விடும்.//

This is a wrong information.

Atchuthan Srirangan said...

Karthik

Source of my article

http://news.yahoo.com/s/ap/20100219/ap_on_hi_te/us_tec_yahoo_microsoft