Tuesday 22 September 2009

* பங்கு வர்த்தகம் சூதாட்டமா? என் பார்வையில்-01

பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும், பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.

சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.




சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.

சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.

விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.

நேரம் கிடைக்கும் போது என் பார்வையில்-02 தொடரும் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post_21.html"

8 comments:

+Ve Anthony Muthu said...

மிக எளிமையாகவும், அருமையாகவும் எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள். படிப்பவர்கள் பயன்பெறட்டும்.

Atchuthan Srirangan said...

முத்து அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி,நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய எழுதுவேன்.

வால்பையன் said...

நல்ல பதிவு!

ARV Loshan said...

அருமை அச்சு.. ஆங்கிலத்தில் புரிந்த,புரியாத விஷயங்களை எளிதாக அழகு தமிழில் சொல்லியுள்ளீர்கள்..

பங்கு சந்தை எனக்கு சில வேலை லாபத்தையும் பலவேளை நாசத்தையும் தந்துள்ளது.
சீட்டாட்டதொடு ஒப்பிட்டவிதம் அருமை.
தொடர்ந்து வாசிப்பேன்.

Atchuthan Srirangan said...

லோஷன்அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

A G Sridaran said...

superb......keep it UP.

A G Sridaran said...

superb....keep it UP.

ராஐ said...

பங்கு சந்தை பற்றி முழுவதும் அறிய ஏதேனும் தமிழ்தளம் உள்ளதா?????