உதாரணமாக ஹட்டன் நேஷனல் பேங்க் (Hatton National Bank -H.NB) நிறுவனம் ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள்(Issues stock)வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். H.N.B சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாகும்.அப்படியொரு நிறுவனம் புதிய பங்குகள் வெளியிடுகிறார்கள் என்றால் அதை வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்படும்.நீ நான் என்று நிறையபேர் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்க விண்ணப்பிப்பார்கள். இப்பொழுது ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள் வெளியிட்ட H.N.B க்கு ஒன்பாதாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள்கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது என்றால் அதை ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed) என்பார்கள்.
அது எப்படி என்கிறீர்களா?........ இப்படிப்பட்ட பெரிய லாபம்கொழிக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிடுகிறாகள் என்றால் சும்மாவா நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள் இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள் ஏராளம்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-over-subscribed.html"
No comments:
Post a Comment