Thursday, 10 September 2009

* தொழில் அடிப்படை (Business Basics)

இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பங்குச்சந்தையை பற்றி போதிய தெளிவுயின்மையே காரணம். சரி, அப்படி என்னதான் அதில் இருக்கிறது?… சற்று உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள்.

பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விசயங்கள்

நீங்கள் தொடங்கும் ஒரு தொழிலுக்கு (Business) தேவைப்படும் முதலே கேப்பிட்டல் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வியாபாரம் ஆரம்பித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவ்வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள், கடை அமைப்பதற்க்கான இடம், போக்குவரத்து போன்றவற்றிக்காக செலவிடும் தொகையே கேப்பிட்டல் ஆகும்.

All the money that you invest to start a business is called as capital.


கேப்பிட்டலை கீழ்கானும் வகைகளில் சேகரிக்கலாம்,

* தொழில் தொடங்குவதற்கு தேவையான பணத்தை தாமே முதலீடு செய்வது. (Self Investment – Full ownership)

* தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலை கடனாக (debt) பெறுவது. இம்முறைக்கு, குறிப்பிட்ட தொகையை வட்டியாக (Interest) செலுத்த வேண்டும்.

மேற்க்கண்ட இரு முறைகளில் தொடங்கப்படும் தொழிலில் பெறப்படும் லாபம் (Profit), நட்டம் (Loss) போன்றவைகள் உங்களையே சாரும் (Self responsibility).

* முதல் திரட்டுவதற்கு நீங்கள் பங்குகள் (Share) வெளியிடலாம். இம்முறையில் பெறப்படும் லாபம் மற்றும் நட்டம் ஆகியவற்றை பங்குதாரர்களிடம் (Share Holder) பகிர்ந்து கொள்ள வேண்டும். (Like Partnership)

கம்பனிகள் கேப்பிட்டலை/நிதி திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடுவார்கள். (Issue Stocks)

பங்குகள் வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகள், (Advantages of issuing stocks)

* கடன் (Loan) வாங்குவதை விட அதிகமான கேப்பிட்டலை / நிதியை (fund) திரட்டலாம்.

* திரட்டபட்ட நிதிக்கு, வட்டி (Interest) மற்றும் முழுத்தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை. (Need not pay back money/interest)

பங்குகள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை,

* பங்குகள் வெளியிடுவதனால், அந்நிறுவனம் தனியொருவருக்கு மட்டும் சொந்தம் ஆகாமல் பங்கு நிறுவனம் ஆகிவிடும். இதனால் நிறுவனத்தின் லாபம் நட்டங்களில் பங்குதாரர்களுக்கும் (share holder) சம உரிமை உண்டு.

ஒரு கம்பனியின் பங்குகளை வாங்குவதன் முலம், அக்கம்பனி ஈட்டும் லாபதில் பங்குதாரருக்கும் பங்கு உண்டு. இதனால் அக்கம்பனி வளர்ச்சி அடைய, அடைய பங்கின் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு, ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங் (JKH – Leading Conglomerate firm in SriLanka) நிறுவனத்தின் நூறு (100) பங்குகளை நூறு(Rs.100) ருபாய் வீதம் (per) பத்தாயிரத்திற்கு (Rs.10,000) வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங் (JKH) நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பங்கின் விலை ருபாய் நுற்றியிருபது (Rs.120) கூடி உள்ளது என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் வைத்துள்ள மொத்த பங்குகளின் மதிப்பு பனிரெண்டாயிரம் ருபாய் (Rs.12,000). இதனால் நீங்கள் பெற்ற லாபம் இரண்டாயிரம் ருபாய் (Rs.2000).

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு (Issuing stocks to public) வெளியிடுமிடம் முதன்மை பங்குச்சந்தை (Primary Market) ஆகும். இதற்கு .பி. (IPO) என்று பொருள்.

The first sale of stocks to the public is called an Initial Public Offer (IPO), and occurs on the primary market. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/business-basics.html"

No comments: