IPO என்றால் என்ன என்பதை பார்த்தோம். இதில், ஒரு நிறுவனம் முதன் முதலாக பங்குகளை வெளியிடும்பொழுது அதற்கு முகப்பு விலை ஒன்றை நிர்ணயித்து வெளியிடுவார்கள்.
உதாரணத்திற்கு, (SAS) என்ற நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம் (நினைவில் இருக்கட்டும், இது உதாரணமே !). இந்நிறுவனத்தை நடத்த அவர்களுக்கு பணம் தேவை. அதை திரட்ட புதிய பங்குகளை (Shares) வெளியிடுவார்கள். அவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு முகப்பு விலையை நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள், ஒரு பங்குகின் விலை ருபாய் பத்து (Rs. 10) என்று. அதாவது பத்து பங்குகள் வாங்கினால் நூறு ருபாய். இதை சந்தையில் யார் வேண்டுமானலும் வாங்கிக்கொள்ளலாம். அதென்ன பத்து ருபாய் பங்கு என்று உங்களுக்கு தோன்றுமே !.. அதையும் பார்ப்போம்.
மேலே கூறப்பட்ட SAS என்பது மிக சிறிய நிறுவனம். அந்நிறுவனம் பங்குகள் வெளியிடும்பொழுது, ஒரு பங்கின் விலை பத்து ருபாய் என்று சிறிய தொகையை நிர்ணயம் செய்வார்கள். ஏனென்றால் அந்நிறுவனத்தை நம்பி யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அது போலதான் நிறைய சிறு நிறுவனங்கள் குறைந்த விலையில் பங்குகளை வெளியிடுவார்கள்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-face-value.html"
No comments:
Post a Comment