இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
யுத்த வெற்றி,அரசு ஊழியர் சம்பள உயர்வு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பே மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
ஆனால் அரசு இப்போதிருக்கும் நிதி நிலையில் சலுகைகளையும் புதிய முதலீட்டு திட்டங்களையும் அறிவிக்க முடியுமா என்பது சந்தேகமான ஒன்றுதான். அப்படி ஒரு வேளை சலுகைகளை அரசு வழங்கினாலும் அது வேறு சில சட்டைப் பைகளில் இருந்து எடுக்கப் பட்டதாகவே இருக்கும். மொத்தத்தில் புதிய வரிகள் அல்லது வரி அதிகரிப்பு ஏதும் இல்லாமல் இருந்தாலே நாமெல்லாரும் அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்போதைய அரசின் நிதி நிலை.
நாளை(28-01-2010) நமது பங்குச்சந்தையில் தவிர்க்க முடியாதபடி பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன.சர்வதேச முதலீட்டாளர்களின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது கணிப்பது கடினம்.
இப்போதைய நிலையில் பங்கு சந்தைகள் (ஏற்கனவே) நல்ல வளர்ச்சியை கண்டு விட்டன. உலக பொருளாதாரத்தின் போக்கு குறித்து இன்னும் சரிவர புரியாத நிலையில் குறுகிய கால அடிப்படையில் சந்தையின் போக்கினை கணிப்பது கடினம். அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் இலங்கைப் பங்குச்சந்தை நல்ல முன்னேற்றத்தைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.
முதலீட்டாளர்கள் எப்போதும் போல, பங்கு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் சமயத்தில் மட்டும் பங்குகளை சேகரிப்பது நல்லது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலும் - பங்குசந்தையும்-01
முற்றும்............
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/02_27.html"
3 comments:
Good comment.
அருமை..
எல்லாரும் இறங்குற நேரத்தில வாங்கினா எப்பிடி லாபம் சம்பாதிக்கிறது? ;P
பங்குச்சந்தை இனிக்கொஞ்ச நாளுக்கு படுத்த படுக்கையாய்த்தான் இருக்கும்....
Post a Comment