பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Saturday, 30 January 2010
* சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் !
ஆப்பிள் கொம்பியூற்றரை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) !
ஆப்பிள் கொம்பியூற்றரைக் உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்சின் வாழ்க்கை ஒவ்வொரு மனிதரும் அறிந்திருக்க வேண்டிய கதையாகும். நம்பியவர்கள் ஏமாற்றுவதும், நயவஞ்சகர்கள் கூடிச் சதி செய்வதுமான உலகில் எதற்கும் கலங்காது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இந்தத் தொழில் மேதையின் வாழ்வு, ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியமானதாகும்.
பரம ஏழையாகப் பிறந்த இவரை வளர்க்க முடியாத நிலையில் தாய் இன்னொருவருக்கு தத்துக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்தத் தாய் பணத்தைக் கேட்கவில்லை, தன்னுடைய மகனை பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்து பட்டமும் பெற யார் உதவுவார்களோ அவர்களுக்கே தனது பிள்ளையை தத்தாக தருவேன் என்று தெரிவித்தார்.
அதற்கு உடன்பட்டு அவரை தத்தெடுத்த வளர்ப்புப் பெற்றோரும் பல்கலைக்கழகம் வரை அவரை படிப்பிக்க வைத்தார்கள். அதற்கு அப்பால் அவர்களால் முடியாமல் போனது. அதை அறிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தானாக படிப்பை நிறுத்தினார். பட்டினியை தீர்க்க தினமும் ஏழு மைல் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஹரே கிருஷ்ணா மடத்தில் ஒரு வேளை உணவு சாப்பிட்டு தனது பசியைப் போக்கினார். நண்பர்களின் அறையில் தங்கி வெற்றுப் போத்தல்களை பொறுக்கி விற்று, படிப்பைத் தொடர்ந்தார். நீ வாழும் ஒவ்வொரு நாளையும் இன்றுதான் உனது வாழ்வின் கடைசிநாள் என்று நினைத்து வாழ் என்று எண்ணி வாழ்ந்தார். இதுதான் அவர் வாழ்வின் ஆதாரசுருதியாகும்.
பாதி நாட்கள் பட்டினி கிடந்தாலும் கூட, அவர் மனதில் எரிந்த அக்கினி ஓய்ந்துவிடவில்லை. கலிகிராபி என்ற கணினி எழுத்து வடிமைப்பை கண்டு பிடிக்க அல்லும் பகலும் போராடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களாக போராடி மக்கின்ரொஸ் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். இவருடைய முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் பின்னாளில் வந்த மக்கிரோ சொப்ரின் விண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டு பிடிப்பு கைக்கு எட்டியதும் தனது 20 வது வயதில் நண்பரான லாஸ் என்பவருடன் இணைந்து சிறிய பட்டறையாக ஆரம்பித்த ஆப்பிள் கணினித் தொழிற்சாலை 10 வருடங்களில் நாலாயிரம் தொழிலாளரைக் கொண்ட இரண்டு மில்லியான் டாலர் பெறுமதியான பாரிய தொழிற்சாலையாக உருப்பெற்றது.
நிறுவனம் வளர வளர அவருக்கும் அவரது நண்பருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கடைசியில் நிர்வாகத்தில் இருந்த சுயநலவாதிகளை எல்லாம் வளைத்துப் போட்ட நண்பர், ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தூக்கி வீசினார். பாம்புக்கு பால் வார்த்ததற்கான பரிசு ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்குக் கிடைத்தது.
தனது 20 வது வயதில் ஆரம்பித்த நிறுவனம் 30 வது வயதில் பறிபோக மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்தார். மற்றவர்களாக இருந்தால் அடியோடு உடைந்தே போயிருப்பார்கள். இரவு பகலாக பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்தை கைப்பற்றிய நயவஞ்சக நண்பர்களையும், அவர்களுடைய இழி செயலையும் அவர் நினைத்து கவலைப்படவில்லை.
புதிய வேகத்துடன் யாருமே உருவாக்காத நெக்ஸ்ற் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார். இது சாதாரண நிறுவனமல்ல, இன்று நாம் பார்க்கும் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க இதுவே அடிப்படையாக அமைந்தது. புதிய கண்டு பிடிப்பால் ஆப்பிள் நிறுவனத்தை விட உயர்ந்த நிலைக்கு சென்ற அவருடைய நெக்ஸ்ற் நிறுவனத்தை கடைசியில் ஆப்பிள் நிறுவனமே வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆரம்பித்த நிறுவனத்திற்கு மறுபடியும் வெற்றியாளராக திரும்பினார். அடுத்தடுத்து ஆப்பிள் கணினிகளின் உற்பத்தியில் அபார சாதனைகளை படைத்தார்.
பின்நாளில் தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அது கசப்பான நிகழ்வாக இருந்தாலும் அனிமேஷனை உருவாக்கும் இடத்திற்கு தான் வளர அதுவே உதவியது என்று கூறி அமைதி கண்டார்.
இதற்குப் பிறகு அவருக்கு கணையத்தில் புற்று நோய் வந்தது. வாழும் ஒவ்வொரு நாளும் கடைசிநாளே என்று வாழ்ந்த அவர் மனவுறுதி தளர்ந்துவிடவில்லை, புற்று நோய்க்கும் பயந்துவிடவில்லை, தொடர்ந்து, உழைத்தார்.
அவரின் மன உறுதிக்கு முன்னால் நிற்க முடியாது புற்று நோயும் மண்டியிட்டு ஓடியது. ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரைப் பிடித்த புற்று நோயும் விலகிப் போனது. மீண்டும் யாரும் நம்ப முடியாதபடி எழுந்து நின்றார். தன்னை நெருங்கிய எல்லாச் சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்வில் அரிய சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினார்.
- இனியவர்களே உங்கள் வாழ்க்கை குறுகியது, அதை நினைனவிற் கொள்ளுங்கள் வீணாக்காதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. எனவே நீங்கள் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையை சிந்தித்தும் வீணாக்கிவிடாதீர்கள். பிறர் கருத்துக்களின் பேராசையில் உங்கள் உள்ளத்து உணர்வுகள் கூறும் வார்த்தைகளை கவனமாகக் கேட்க மறந்துவிடாதீர்கள். உங்கள் இதயமும், உள்ளுணர்வும் கூறுகிறபடி கேட்டு வாழுங்கள். சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் ! – என்றார்.
ஸ்டீவ் ஜாப்ஸின் சொற்பொழிவு- Stay Hungry. Stay Foolish.
பொதுவாக அறிவுரை பலரிடமிருந்தும் கிடைக்கலாம். ஆனால் சாதித்தவர்களின் அறிவுரைகள் விலைமதிப்பற்றவையாகும். அவற்றைப் பின்பற்றினால் அடைய முடியாத சிகரங்கள் இல்லவே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய அற்புத மனிதர்.
ஆண்டு சம்பளம் 1 டொலர் பெறும் நிறுவனத்தின் தலைவர். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_10.html"
லேபிள்கள்
ஆப்பிள்,
ஸ்டீவ் ஜாப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் ! – என்றார்.
///
்ம்்ம்்ம்
நாங்களும் இருப்போமே...ஹிஹிஹி
நல்ல பதிவு அச்சு
வாழ்த்துக்கள்
Again a good one from you.Congratulation.Best wishes to continue to publish more.............
கலக்கிடிங்க தல !! வாழ்த்துகள்.... Steve jobs பற்றி முழுவதும் சொல்லி இருகிறிங்க
வசனநடை தூள்....
பதிவு சூப்பர் !! :-) இரு இடங்களை தவிர :-(
பகிர்வுக்கு நன்றி
GUD JOB!! KEEP IT UP BRO!!
super post! Good job!
இவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாமல் இருந்ததது அறியத்தந்தமைக்கு நன்றிகள் நண்பா
நல்ல பதிவு..
கேபிள் சங்கர்
//அண்ணாமலையான் said...
gud post//
அண்ணாமலையான் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//றமேஸ்-Ramesh said...
்ம்்ம்்ம்
நாங்களும் இருப்போமே...ஹிஹிஹி//
கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்
//rirangan said...
Again a good one from you.Congratulation.Best wishes to continue to publish more.............//
Thank you very much 4 ur comment, i hope to write more articles......
//ruban said...
GUD JOB!! KEEP IT UP BRO!!//
Thank u very much 4 ur comment.
//புல்லட் said...
super post! Good job!//
Thank u 4 ur comment புல்லட்.
//Balavasakan said...
இவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாமல் இருந்ததது அறியத்தந்தமைக்கு நன்றிகள் நண்பா//
கட்டாயம் மேலும் பல பதிய விடயங்கள் பதிவாக வரும்.
Balavasakan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
தன்னம்பிக்கையைத் தரக்கூடிய நல்ல பதிவு.
பகிர்தலுக்கு நன்றி.
//எப்பூடி..... said...
//கலக்கிடிங்க தல !! வாழ்த்துகள்.... Steve jobs பற்றி முழுவதும் சொல்லி இருகிறிங்க
வசனநடை தூள்....
பதிவு சூப்பர் !! :-) இரு இடங்களை தவிர :-(
பகிர்வுக்கு நன்றி//
எந்த இரு இடங்களை தவிர????
எப்பூடி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//shortfilmindia.com said...
நல்ல பதிவு..
கேபிள் சங்கர்//
கேபிள் சங்கர் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//Chandravathanaa said...
தன்னம்பிக்கையைத் தரக்கூடிய நல்ல பதிவு.
பகிர்தலுக்கு நன்றி.//
Chandravathanaa உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
கலக்கல் பதிவு அச்சு
// இன்று நாம் பார்க்கும் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க இதுவே அடிப்படையாக அமைந்தது//
Pixar வேறு NEXT வேறு நீங்கள் குறிப்பிடுவது Pixar தற்போது walt Disney வாங்கி உள்ளது . அதனால் இப்போ Steve: a director of The Walt Disney Company
//பத்து வருடங்களாக போராடி மக்கின்ரொஸ் கம்ப்யூட்டரை வடிவமைத்தார் //
//கண்டு பிடிப்பு கைக்கு எட்டியதும் தனது 20 வது வயதில் நண்பரான லாஸ் என்பவருடன் இணைந்து//
1st APPLE 1
2nd APPLE 2 -much successful
3rd & 4th APPLE 3, LISA- not success
5th Macintosh - again success
i-phone , i-pod ,(i pad) தவற விட்டுடிங்க ;-)
//ஆப்பிள் கொம்பியூற்றரை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) !//
steve: not a technical person அவர் எதை invent பண்ணல but innovation , தலை தல தான்
//ஸ்டீவ் ஜாப்ஸ் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய அற்புத மனிதர்.//
இது உண்மையிலும் உண்மை
எனக்கு தெரிந்ததை பகிர்ந்து உள்ளேன் இதையும் சேர்த்து கொள்ளமுடியுமா ??
//Subankan said...
கலக்கல் பதிவு அச்சு//
Subankan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
நான் அவரின் உரையாடலைப் பின்பற்றியே எழுதியுள்ளேன்.
//எனக்கு தெரிந்ததை பகிர்ந்து உள்ளேன் இதையும் சேர்த்து கொள்ளமுடியுமா ??//
கட்டாயம் சேர்த்து கொள்வேன்.
நன்றி எப்பூடி....
Post a Comment