வடக்கு,கிழக்குப் பகுதியில் உள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச்சந்தையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விவசாய வளம் மிகுதியாக இருக்கின்றது. எனவே அதைச் சார்ந்த உயிரியல் வேதியல், உரம் உள்ளிட்ட தொழிற்துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், இதன் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
இம்முயற்சியின் ஓர் அங்கமாகத் தற்போது யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச் சந்தையின் கிளையை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.
அலுவலகக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பங்குச் சந்தை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் கிளை அலுவலகத்துக்கான கட்டிடம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுவிடும் என இலங்கை பங்குச்சந்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_22.html"
10 comments:
திறப்பு விழாவுக்கு என்ன பெயர்? பங்கு தமிழா?
:))
அட..அன்னிக்குத்தான் சொன்னீங்க கூடியவிரைவில் என்னுடைய பதிவுகளை வாசிப்பீர்கள் எனடு அதுக்குள்ள வாசிக்கவச்சீட்டாங்க... ம் இனி உங்களுக்குத்தான் கரைச்சல் அடிக்கடி கொடுப்பன் ....
ஓ... அப்படியா! நல்லது...
அங்கும் ப.ச.அ. போவாரா...???
///புல்லட் said...
திறப்பு விழாவுக்கு என்ன பெயர்? பங்கு தமிழா?//
தமிழ்ப் பங்குச் சந்தை..???
//புல்லட் said...
திறப்பு விழாவுக்கு என்ன பெயர்? பங்கு தமிழா?//
இது புதிய கிளை திறப்பு விழா.........
பொங்கலில் பொங்கியது காணும் அண்ணா
புல்லட் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி
//Subankan said...
:))//
சுபாங்கன் உங்கள் சிரிப்புக்கு அர்த்தம் விளங்கவில்லை???
சுபாங்கன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//Balavasakan said...
அட..அன்னிக்குத்தான் சொன்னீங்க கூடியவிரைவில் என்னுடைய பதிவுகளை வாசிப்பீர்கள் எனடு அதுக்குள்ள வாசிக்கவச்சீட்டாங்க...//
ஹி....ஹி....
//ம் இனி உங்களுக்குத்தான் கரைச்சல் அடிக்கடி கொடுப்பன் ....//
தோழரே யாரை தேடுகிறீர்கள்??
பாலா வாசகன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//றமேஸ்-Ramesh said...
ஓ... அப்படியா! நல்லது...
அங்கும் ப.ச.அ. போவாரா...???//
வாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் போவேன்...
//தமிழ்ப் பங்குச் சந்தை..???//
பங்குச்சந்தையை ஆகவே விடுங்கள்..
றமேஸ் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
கட்டடம் தெரிவாகிவிட்டது.
மாசி இறுதிப்பகுதி அல்லது பங்குனி ஆரம்பத்தில் திறக்கப்படும்
Post a Comment