Saturday 2 January 2010

* பண வீக்கமும் முதலீடும்-02

* பண வீக்கமும் முதலீடும்-01

தற்போது அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையால் இரு வகை நிகழ்வுகள் நிகழும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கினர்.

1. Price Inflation (வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவை பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தல்)

2. Asset Deflation (வீடு, நிலம் மற்றும் பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு குறைதல்)

அதாவது நாம் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் பொருளின் விலை அதிகரிக்கும் ஆனால் நம்முடைய முதலீட்டின் விலை அந்த அளவுக்கு உயராது. இந்த நிலை தற்போதே இலங்கையில் வர தொடங்க உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலை நாடுகளில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை விட இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் குறைவாக இருக்கும்.

ஆனாலும் இதை பற்றி தற்போதைய நடுத்தர வயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் செலவிட என்று பல முதலீடுகளை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது நிலம், வீடு,மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை முதலீடு என்று. ஆனால் அவற்றின் உண்மையான மதிப்பு பண வீக்கத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் குறைந்திருக்கும். அப்போதைய விலை வாசியும் மிக அதிகமாக இருக்கும்.

இது போன்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்க பட போவது பணி ஓய்வு பெற்றவர்களாக இருப்பர். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சரிவால், பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தவர்கள் போதிய பணம் இல்லாததால் இன்னும் நிறைய ஆண்டுகள் தங்கள் தள்ளாத வயதில் வேலை செய்ய வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வு பற்றி டேனியல் அமெர்மேன் என்னும் பொருளாதார வல்லுனர் கூறுவதை கேளுங்கள்

If Your asset doubles in price, but a dollar will only buy what a quarter used to, then you didn’t double your money,you just lost half your savings, and any measures that doesn’t pick up on the difference isn’t worth using.



இது போன்ற நிகழ்வுகளால் மக்கள் பொருட்களின் பண வீக்கம் (price inflation)மற்றும் சேமிப்பு பண வடிதல்(asset defalation) ஆகிய இரண்டாலும் பாதிக்க படுவர். இந்த பாதிப்பு முக்கியமாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகம் இருக்கும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/02.html"

5 comments:

Admin said...

உரிய நேரம் பார்த்து முதளிடுவோம் என்று பார்த்தேன் ஆனால். பணம்தான் இல்லை.

நல்ல தொடர்... தொடருங்கள் வாழ்த்த்துக்கள்.

asfar said...

i dont know more ideas about shareing system, but i like to involve, so please explain how to involve, just small amount invest in my first step, waiting for your kind reply.
info@asfar.20m.com

tharshayene said...

நல்ல பயனுள்ள பதிவுகள்...!

Srirangan Kathiravelu said...

Good attempt,but needs to cover more, expecting next part ASAP

RJ Dyena said...

nalla pathivu....

vaazhukkal innum thodara..

priyamudan
Dyena