
2010ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் மூடப்பட்டன.ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி(Barnes Banking Company), செயின்ட் ஸ்டீபன் வங்கி(St Stephen State Bank), டவுன் கம்யூனிட்டி வங்கி(Town Community Bank & Trust) உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி (Horizon Bank) திவாலானது.
அமெரிக்க காப்பீட்டுத் துறையால் உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்த வங்கிகள் 8000.இந்த 3 வங்கிகள் திவாலானதால் 296.3 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க காப்பீட்டுத் துறை அறிவித்துள்ளது.
2009-ம் ஆண்டில் மட்டும் 140க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு மேல் மூடு விழா கண்டுள்ளன. 2008-ல் 20 வங்கிகளும், 2007-ல் மூன்று வங்கிகளும் மூடப்பட்டன.
அமெரிக்கா:ஒரேநாளில் 3 வங்கிகளுக்கு மூடு விழா-வீரகேசரி submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/3.html"
2 comments:
நம் நாட்டு தனியார் வங்கிகளுக்கு இந்நிலை ஏற்படாத வரை நாமெல்லாம் பாக்கியவான்கள்..காரணம் அதிகமானவர்களின் வைப்பு தனியார் வங்கியிலே தங்கியுள்ளது...
(thanks for the link)
//A.V.Roy said...
நம் நாட்டு தனியார் வங்கிகளுக்கு இந்நிலை ஏற்படாத வரை நாமெல்லாம் பாக்கியவான்கள்..//
நல்ல கவலை...
//thanks for the link//
வீரகேசரி இணையத்தில் உள்ளதும் என் ஆக்கம் தான்.
A.V.Roy உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி
Post a Comment