Sunday, 10 January 2010

* ஆண்டு சம்பளம் 1 டொலர் பெறும் நிறுவனத்தின் தலைவர்

ஆப்பிள்(Apple Inc) நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs), 2009-ல் தனது ஆண்டு சம்பளமாக $1 டொலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.அதேபோல 2009-ம் ஆண்டு பல வருடாந்த போனஸ் உள்ளிட்ட சலுகைகளையும் அவர் பெறவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் நிறுவியவர் ஜாப்ஸ். இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டொலர் மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.

ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டொலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் டாப் CEO என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ம் ஆண்டு தனது பயணப்படியாக 4,000 டொலரை மட்டுமே பெற்றுள்ளார்.இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 871,000 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டொலர்கள்.

ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

நம் நாட்டில் இப்படி ஒருவரை காணமுடியுமா??????? submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/1.html"

18 comments:

Unknown said...

ஏன் இப்பிடி?

விசித்திரமாவெல்லோ இருக்கு?

Srirangan Kathiravelu said...

Good work.Congrats continue.............

Atchuthan Srirangan said...

//ஏன் இப்பிடி?//
அது அவரின் விருப்பம்


//விசித்திரமாவெல்லோ இருக்கு?//
இதில் என்ன விசித்திரம் கோபி??

http://www.forbes.com/feeds/ap/2009/12/23/technology-technology-hardware-amp-equipment-us-apple-executive-compensation_7237051.html

கோபி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....

Prasanna said...

good job..
keep it up brother..

Prasanna said...

good job brother.,....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஜெயலலிதாவும் தான் ஒரு ரூபா சம்பளம் பெறுவதாக அறிவித்திருந்தா ஒருக்கா.

படம் காட்டலும் பணம் உழைத்தலும் என்ற தலையங்கத்தின் கீழ் இவை வரும். :)

Atchuthan Srirangan said...

//படம் காட்டலும் பணம் உழைத்தலும் என்ற தலையங்கத்தின் கீழ் இவை வரும். :)//


மது ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs)ஐ படம் காட்டுபவர் என்கிறிரா?????

மது உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...

Atchuthan Srirangan said...

Prasanna உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...

Atchuthan Srirangan said...

Srirangan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி..

Jay said...

எல்லாம் அவர் பங்குகளை வைத்திருப்பதால்தான்...! அதிலிருந்து லாபம் வருகின்றது தானே.. பப்ளிக் ஸ்டண்ட் ;)

Anonymous said...

// எல்லாம் அவர் பங்குகளை வைத்திருப்பதால்தான்...! அதிலிருந்து லாபம் வருகின்றது தானே.. பப்ளிக் ஸ்டண்ட்

It is true... well said

He may be a dedicated worker, but, he will accept the salary, if he doesn't have that shares ! :D :D

mnalin said...

Steve job வை பற்றி நிறைய பேசலாம் சிறிய வயதில் ரெம்பவும் அடிபட்டவர் ... " innovation " என்றதை கொண்டு 80 களில் கலக்கு கலக்கியவர் இப்பவும் தான். ஒரு முன்மாதிரியான மனிதர்

Think Why Not said...

/*... இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார்.
...*/

விலக்கப்பட்டவர் என்று சரியாக கூறுங்கள். தான் உருவாக்கிய சொந்த நிறுவனத்திலிருந்தே துரத்தப்படும் அவலம் அவருக்கு நேர்ந்தது....

/* எப்பூடி..... said...
Steve job வை பற்றி நிறைய பேசலாம் சிறிய வயதில் ரெம்பவும் அடிபட்டவர் ... " innovation " என்றதை கொண்டு 80 களில் கலக்கு கலக்கியவர் இப்பவும் தான். ஒரு முன்மாதிரியான மனிதர்
...*/
நிச்சயமாய்..

Atchuthan Srirangan said...

//Mayooresan said...

எல்லாம் அவர் பங்குகளை வைத்திருப்பதால்தான்...! அதிலிருந்து லாபம் வருகின்றது தானே.. பப்ளிக் ஸ்டண்ட் ;)//

ஒரு சிலர் லாபம் மற்றும் சம்பளம் என்று பல கோடியை சுருட்டுகின்றனர்...

சம்பளம் $1 டொலரை மட்டும் இவர் வாங்கினால்,பப்ளிக் ஸ்டண்ட்????

Atchuthan Srirangan said...

Mayooresan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...

Atchuthan Srirangan said...

எப்பூடி..... said...

//Steve job வை பற்றி நிறைய பேசலாம் சிறிய வயதில் ரெம்பவும் அடிபட்டவர் ... " innovation " என்றதை கொண்டு 80 களில் கலக்கு கலக்கியவர் இப்பவும் தான். ஒரு முன்மாதிரியான மனிதர்//


Pirates of the Silicon Valley - பாருங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஒரு குறும்படம். நன்றாக இருக்கும்

Atchuthan Srirangan said...

//Thinks Why Not said...

விலக்கப்பட்டவர் என்று சரியாக கூறுங்கள். தான் உருவாக்கிய சொந்த நிறுவனத்திலிருந்தே துரத்தப்படும் அவலம் அவருக்கு நேர்ந்தது....//

இவர் தான் நிறுவிய நிறுவனத்திலிருந்தே, தனது கோபத்தாலும், அடக்கியாளும் குணத்தாலும் துறத்தப்பட்டார்.

Thinks Why Not உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...

mnalin said...

//Pirates of the Silicon Valley - பாருங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஒரு குறும்படம். நன்றாக இருக்கும்//
பார்த்து இருக்கிறேன்

//தனது கோபத்தாலும், அடக்கியாளும் குணத்தாலும் துறத்தப்பட்டார்.//
என்பது சற்று அதிகம். தேவை இல்லை என்றால் மீண்டும் steve job appleலுக்கு அழைத்தது ஏன் ? :காரணம் microsoft வளர்ச்சி தான் இரண்டுக்குமே .
steve job இல்லாவிடின் microsft ஆல் அழிந்த கம்பெனி list apple லும் .....

இது எல்லாம் அரசியில் சாதாரணமப்பா