தலைப்பைப் பாத்து ஏதாவது காரசாரமான அரசியல் பதிவுன்னு நினைச்சி வந்திருந்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்.
இலங்கை பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கிய விஷயமாக பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதித்திருக்கின்றது. இந்த விஷயத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்த்தப் போகின்றன.
தற்பொழுது சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் பக்கம் திரும்பியுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறப்பான இடமாக இலங்கை பரிணமித்துள்ளது.இதற்கிடையில் தற்போது காணப்படுகின்ற சில நடமாட்ட தடைகளையும் சர்வதேச முதலீட்டாளர்களின் தேவைக்கருதி அரசாங்கம் தளர்த்த வேண்டும்.
இலங்கையின் பங்குசந்தை சர்வதேச அளவில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி, 2009ம் ஆண்டில் 112 சதவீத வளர்ச்சிப் போக்கை காட்டியதாகவும் காணப்பட்டது.
இதுவரை சொன்னது, மொத்த பங்கு சந்தையில் ஏற்படும் பொதுவான மாற்றங்களைப் பற்றியது மட்டுமே. தனிப்பட்ட பங்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன.
குறுகியகால பங்குலாபங்களை(சலுகைகளை) விடுத்து மூலதன லாபத்துக்கு (நீண்ட காலத் திட்டங்கள்) எவை என நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடிக்க வல்ல நமது ஜனாதிபதித் தேர்தலில் சுவாரஸ்யத்திற்கும் என்றும் பஞ்சமில்லை. சுவாரஸ்யங்களை கண்டு ரசிக்கும் அதே வேளையில் வாக்களிக்கும் கடமையை மறந்து விட வேண்டாம்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_25.html"
3 comments:
ஆமா இல்ல !!!! நாங்க எப்பயோ ரெடி ஆகிடமில...
Thanks for the links dude..
//சுவாரஸ்யத்திற்கும் என்றும் பஞ்சமில்லை//
அதே.. அதே...
அடடா, தேர்தலால எங்கெங்கெல்லாம் மாற்றம் வருது..
//வாக்களிக்கும் கடமையை மறந்து விட வேண்டாம்//
ம்ம்..அனைவரும் கடமையைச் செய்ய வேண்டும்தான்.
நாளை மறுதினம் பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...;)
ம்..ம்.. பாக்கலாம் என்ன நடக்குதின்னு...
Post a Comment