பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.
பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading or Intraday Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 450 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன்.
ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 100, 200 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.
நான் எப்பொழுதும் DIST,SLTL,CABO போன்ற எனக்கு தெரிந்த பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை அந்த கம்பனிப் பக்கம் இழுத்துச் சென்றது.
அன்று பார்த்து அந்த கம்பனி பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது.
பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.
நேரம் கிடைக்கும் போது என் பார்வையில்-03(இறுதி பார்வை)தொடரும்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/02_23.html"
3 comments:
Hi page desing are super. write more about your experience and give many tips to enter to share market
முகுந்தன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி,நேரம் கிடைக்கும் போது என் பங்கு சந்தை அனுபவங்களை ''நான் ஷேர் மார்க்கெட் துறைக்கு வர காரணங்களும், ஷேர் மார்க்கெட் வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்களும்'' என்ற தலைப்பில் கீழ் தர எண்ணியுள்ளேன்.
http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post_17.html
அபாரம். முழுமையான பங்கு சந்தை அறிவு தெரிகிறது.
என்னுடைய வருங்கால ப.ச ஆலோசகர் நீங்கள் தான்.. ;)
உங்கள் ஆலோசனைகள் தேவை..
Post a Comment