Monday, 28 September 2009

* பங்கு வர்த்தகம் சூதாட்டமா? என் பார்வையில்-03

மார்ஜின் டிரேடிங்கை (Margin Trading or Intraday Trading) எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது ?அதில் ரிஸ்க் அதிகம். பங்கு விலை ஏறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து ஏறலாம் அல்லது இன்னும் சரியலாம்.

நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். சமரவீரவால் ஜெயசூரிய போல் ஆட முடியுமா என்ன? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.
அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம்,தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது.
சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.


முற்றும் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/03.html"

3 comments:

Anonymous said...

நன்றி

siv said...

பயனுள்ளதாக உள்ளது அச்சுதன் வாழ்த்துக்கள்

செந்தில் said...

can you explain,, about "how to buy shares"....and where to buy them,,,,