இலங்கை பங்குச்சந்தை இன்று 0.87 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.87 சதவீதம் (25.39 புள்ளி) உயர்ந்து 2,938.64 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.15 சதவீதம் (37.47 புள்ளி) உயர்ந்து 3,297.43 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.24 பில்லியன் ரூபாய்.
புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 38.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 131.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 93.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/30092009.html"
3 comments:
செலான் வங்கி பங்குகளை விற்பதாக அறிவித்துள்ளது, அதுபற்றி சில விபரங்களை தரமுடியுமா..?
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் இலங்கை வங்கியும் செலான் வங்கியின் வாக்குரிமை உள்ள 19,383,000 பங்குகளை 35 ரூபாய் வீதம் 678 மில்லியன் ரூபாவுக்கு வாங்கியுள்ளன. இப்பங்குகளில் இலங்கை வங்கி வாங்கிய 13,000,000 பங்குகள்,பங்கு வெளியீட்டின் பின் உள்ள மொத்த வாக்குரிமை பங்குகளில் 10% ஆகும். விரைவில் இதனை பற்றி தனி பதிவு இடுவேன்.உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி,நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய எழுதுவேன்.
அருமையான சேவை அச்சு.. பின்னூட்டமிடாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..
Post a Comment