Thursday, 24 September 2009

* எனது பங்குச்சந்தை குரு - வார்ன் பப்ட் (Warren Buffet)

பணக்கார பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வார்ன், அமெரிக்காவில் உள்ள ஒமகா என்னும்மிடத்தில் (Omaha, Nebraska America), 1930, ஆகஸ்ட் மாதம் (August 30th) தேதி பிறந்தார்.

பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாரான இவர், பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) கம்பெனியின் சி.இ.ஒ (CEO – Chief Executive Officer) ஆவார்.


வார்னும் பங்குச் சந்தையும்: (Warren and Share Market)


பெஞ்சமின் கிரஹாம் (Benjamin Graham) எழுதிய (The Intelligent Investor) என்ற புத்தகத்தை படித்ததில் இருந்து, அவர் வாழ்க்கைப் பாதையே மாரியது. அந்த புத்தகத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்ட விசயம் “பெரிய நிறுவனங்களிள் முதலீடு செய்வதை விட, வருங்காலத்தில் மிகப்பெரியதாக வரக்கூடிய நிறுவனங்களிள் முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது தான்.

* 20ஆம் வயதில் தனது எம்.எஸ் பொருளாதாரம் ((MS – Master Of Science in Economics) படிப்பை கொலம்பிய பல்கலை கழகத்தில் ((Columbia University) முடித்த வார்ன் சிறிது காலம் பங்கு தரகராக (Stock Broker) வேலை பார்த்தார்.

* 22ஆம் வயதில் சூசன் தாம்ஸன் (Susan Thompson) என்பவரை மணந்தார்.

* 24ஆம் வயதில் பென்சமின் (Benjamin) என்பவரிடம் ஆண்டுக்கு $12,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.

* 26ஆம் வயதில் தனது சொந்த ஊரான ஒமகா-வுக்கு (Omaha) திரும்பிய வார்ன் பஃப்ட் (Warren Buffet) பார்ட்னர்சிப் லிமிட் (Buffett Partnership Ltd) என்னும் கம்பனியை தொடங்கினார்.

* 29ஆம் வயதில் ஆறு கம்பனிகளை நிர்வகித்தார்.

* 32ஆம் வயதில் தனது அணைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றினார். (Merged six companies into one)

* பஃப்ட் ஜவுளித் துறையில் (Textile) முதலீடு (Invest) செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கண்டறிந்து, பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்னும் நிறுவனத்தின் பங்குகளை (Shares) $7.60 க்கு/share வாங்கினார்.

* 35ஆம் வயதில் தொடர்ந்து பெர்க்சயர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் முலம், அந்நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். (He has become the chairman of Berkshire Hathaway)

* 36ஆம் வயதில் முதன் முறையாக தனியார் நிறுவனங்களான கோன் அன்டு கோ (Kohn and Co), மற்றும் கோச்சைல்டு-ல் (Hochschild) முதலீடு செய்தார்.

* 43ஆம் வயதில் வாசிங்டன் போஸ்ட் கம்பனியின் (Washington post company) பங்குகளை வாங்கி, அந்நிறுவனதின் நிர்வாக உறுப்பினராக பங்கேற்றுக் கொண்டார்.

* 47ஆம் வயதில் மறைமுகமாக பஃப்பலோ ஈவ்னிங் நியூஸ் (Buffalo Evening News) என்ற கம்பனியை $1.02 billion வாங்கினார்.

* 58ஆம் வயதில் கோக்க-கோலா கம்பனியின்(Coca-Cola company) ஏழு சதவீகித பங்குகளை (7 percentage of shares) பில்லியன் டாலர்களுக்கு (Billion dollars) வாங்கினார். இது பஃப்ட்டுக்கு மிகுந்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்குகளாக விளங்குகியது

* 69ஆம் வயதில் இவர் Money manager என்று கார்ஜன் குருப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (survey by the Carson Group in 20th century)

* 75ஆம் வயதில் தனது பெர்க்சயர் நிறுவனத்தின் 85% பங்குகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தார்.இதில் பெரும்பான்மையான பங்குகள் பில் கேட்ஸ் மணைவின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசனுக்கு (Bill and Melinda Gates Foundation) கொடுக்கப்பட்டது.

* 77ஆம் வயதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெயர் பெற்றார். (Buffett becomes the richest man in the world according to Forbes) submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/warren-buffet.html"

5 comments:

+Ve Anthony Muthu said...

வாரன் பஃப்ஃபட் குறித்த மிக அற்புதமான தகவல்கள். வாழ்த்துக்கள் சகோதரா.

வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு அற்புதமான முன்னுதாரணம் அவர்.

நீங்களும் அவர் போல முன்னேற வாழ்த்துகிறேன்.

Ajandan V said...

good post.. thanks

maruthamooran said...

////* 58ஆம் வயதில் கோக்க-கோலா கம்பனியின்(Coca-Cola company) ஏழு சதவீகித பங்குகளை (7 percentage of shares) பில்லியன் டாலர்களுக்கு (Billion dollars) வாங்கினார். இது பஃப்ட்டுக்கு மிகுந்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்குகளாக விளங்குகியது////

வரன் பப்பாட், தனது 13வயதில் ‘கொக்ககோலா’ குளிர்பான போத்தல்களை தான் குடியிருந்த தெருவிலும், அருகிலுள்ள பகுதிகளுக்கும் வீடு வீடாக கொண்டு சென்று தனது வியாபாரத்தை முதன்முதலாக ஆரம்பித்தார். அதற்கு அவரது தாத்தா உதவினார். இந்த தகவலை ‘கொக்ககோலா’ நிறுவனத்தில் பங்குதாரர் கூட்டமொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Unknown said...

Very enthusiastic post.... Keep it up...You are impressed by warren buffet...hope in future..lot people will be impressed by you

Good Luck

வால்பையன் said...

பப்பட்டின் ஆலோசனைகள் உலக பிரசித்தி பெற்றவை!
அறிய தந்தமைக்கு நன்றி!

கமாடிடி பற்றி எதாவது தெரிந்தால் அறியப்படுத்துங்கள்!