Thursday, 31 December 2009

* பண வீக்கமும் முதலீடும்-01

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வரும் வருமானத்தை விட கூட ஆகும் செலவை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரடியாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.

சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க இயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.

பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளது. 1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்த போது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல் படுகின்றனர்.

இந்த பதிவு பண வீக்கத்தின் காரணத்தை ஆராய்வது இல்லை.

பண வீக்கமும் முதலீடும்-02 ல் தொடரும்....... submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/01.html"

Wednesday, 30 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 30.12.2009


இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 0.86 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.86 சதவீதம் (28.96 புள்ளி) உயர்ந்து 3,385.55 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.75 சதவீதம் (28.81 புள்ளி) உயர்ந்து 3,849.38 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 765.4 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 30.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 30.12.2009

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 130.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 43.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 173.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/30122009.html"

Tuesday, 29 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 29.12.2009


இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.35 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.35 சதவீதம் (11.70 புள்ளி) உயர்ந்து 3,356.59 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.30 சதவீதம் (11.55 புள்ளி) உயர்ந்து 3,820.57 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 620.9 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 29.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 29.12.2009

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 81.6 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 135.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 217.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/29122009.html"

Monday, 28 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 28.12.2009


இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 1.58 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.58 சதவீதம் (52.13 புள்ளி) உயர்ந்து 3,344.89 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.84 சதவீதம் (31.78 புள்ளி) உயர்ந்து 3,809.02 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 562.9 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 28.12.2009
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 28.12.2009

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 100.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 49.2 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 149.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/28122009.html"

* உங்கள் வாழ்க்கையில் செல்வமும் அமைதியும் வேண்டுமென்றால்

  1. மனதை கட்டுப்படுத்துங்கள் (Master your mind,Emotions & Thoughts).

  2. உடலை மேம்படுத்துங்கள் (Master your Body).

  3. உறவுகளை மேம்படுத்துங்கள் (Master your Relationships).

  4. செல்வத்தை சரியாக நிர்வகியுங்கள் (Master of Finance).

  5. நேரத்தை சரிவர உபயோகப்படுத்துங்கள் (Master your Time)
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_28.html"

Sunday, 27 December 2009

* சேமிப்பு Vs முதலீடு (Difference between savings and Investments)




சேமிப்பு (Savings)

முதலீடு (Investment)

சேமிப்பு என்பது வருமானத்தின் ஒரு பகுதி. இதன் மூலம் பலனை எதிர்பார்க்காமல், பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வங்கிகளில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது.

(Money will be safe)

லாபம் தரும் என்ற நம்பிக்கையில், வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஏதேனும் ஒரு பொருளின் (நிலம், வீடு, தங்கம், பங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்) மீது முதலீடு செய்வதே இன்வஸ்மெண்ட் ஆகும்.

இதில் பாதுகாப்பு நிறைய, லாபம் குறைவு.

(More safe, less profit)

முதலீடு உங்களுக்கு லாபகரமாகவும் அமையலாம், அதே சமயம் நட்டமும் ஏற்ப்படலாம். மொத்தமாக சொல்லப்போனால் இதில் பாதுகாப்பு குறைவு.

சேமித்த பணத்தை நம் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(Liquidity is the key feature)

பொருளாதார அடிப்படையில் சொல்வதென்றால், முதலீடு என்பது தற்போதய உபயோகத்திற்க்கு அல்லாமல் வளமான எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவது. (No Liquidity)

முதலீட்டில் அவசர தேவையை பூர்த்தி செய்யவது சற்று கடினமே. அவ்வாறு செய்ய நினைத்தால், அது நட்டத்திலும் அமையலாம்.

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/vs-difference-between-savings-and.html"

Saturday, 26 December 2009

* இலங்கை பங்குச்சந்தையில் காளையும் கரடியும் சந்தித்தால்?

வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது.

சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது பங்குச்சந்தை மேலே சென்றதும்,சந்தையின் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருவாரியாக முன்னேற்றமடைந்தது சந்தையின் வலுவான மனநிலையையே காட்டுகின்றது.

முந்தைய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியுற்ற வங்கித் துறை, உற்பத்தித் துறை, வாகனத் துறை பங்குகள் தீவிர "விற்ற பின் வாங்குதல்" (Short Covering) காரணமாக மேல் சென்றதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக பங்குகளை வாங்கியது குறிப்பிடத் தக்கது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Bonus படங்கள்:-




submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_26.html"

Friday, 25 December 2009

* எனது பங்குச்சந்தை குரு - வார்ன் பப்ட் (Warren Buffet) - மீள்பதிவு

பணக்கார பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வார்ன், அமெரிக்காவில் உள்ள ஒமகா என்னும்மிடத்தில் (Omaha, Nebraska America), 1930, ஆகஸ்ட் மாதம் (August 30th) தேதி பிறந்தார்.

பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாரான இவர், பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) கம்பெனியின் சி.இ.ஒ (CEO – Chief Executive Officer) ஆவார்.


வார்னும் பங்குச் சந்தையும்: (Warren and Share Market)


பெஞ்சமின் கிரஹாம் (Benjamin Graham) எழுதிய (The Intelligent Investor) என்ற புத்தகத்தை படித்ததில் இருந்து, அவர் வாழ்க்கைப் பாதையே மாரியது. அந்த புத்தகத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்ட விசயம் “பெரிய நிறுவனங்களிள் முதலீடு செய்வதை விட, வருங்காலத்தில் மிகப்பெரியதாக வரக்கூடிய நிறுவனங்களிள் முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது தான்.

* 20ஆம் வயதில் தனது எம்.எஸ் பொருளாதாரம் ((MS – Master Of Science in Economics) படிப்பை கொலம்பிய பல்கலை கழகத்தில் ((Columbia University) முடித்த வார்ன் சிறிது காலம் பங்கு தரகராக (Stock Broker) வேலை பார்த்தார்.

* 22ஆம் வயதில் சூசன் தாம்ஸன் (Susan Thompson) என்பவரை மணந்தார்.

* 24ஆம் வயதில் பென்சமின் (Benjamin) என்பவரிடம் ஆண்டுக்கு $12,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.

* 26ஆம் வயதில் தனது சொந்த ஊரான ஒமகா-வுக்கு (Omaha) திரும்பிய வார்ன் பஃப்ட் (Warren Buffet) பார்ட்னர்சிப் லிமிட் (Buffett Partnership Ltd) என்னும் கம்பனியை தொடங்கினார்.

* 29ஆம் வயதில் ஆறு கம்பனிகளை நிர்வகித்தார்.

* 32ஆம் வயதில் தனது அணைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றினார். (Merged six companies into one)

* பஃப்ட் ஜவுளித் துறையில் (Textile) முதலீடு (Invest) செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கண்டறிந்து, பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்னும் நிறுவனத்தின் பங்குகளை (Shares) $7.60 க்கு/share வாங்கினார்.

* 35ஆம் வயதில் தொடர்ந்து பெர்க்சயர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் முலம், அந்நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். (He has become the chairman of Berkshire Hathaway)

* 36ஆம் வயதில் முதன் முறையாக தனியார் நிறுவனங்களான கோன் அன்டு கோ (Kohn and Co), மற்றும் கோச்சைல்டு-ல் (Hochschild) முதலீடு செய்தார்.

* 43ஆம் வயதில் வாசிங்டன் போஸ்ட் கம்பனியின் (Washington post company) பங்குகளை வாங்கி, அந்நிறுவனதின் நிர்வாக உறுப்பினராக பங்கேற்றுக் கொண்டார்.

* 47ஆம் வயதில் மறைமுகமாக பஃப்பலோ ஈவ்னிங் நியூஸ் (Buffalo Evening News) என்ற கம்பனியை $1.02 billion வாங்கினார்.

* 58ஆம் வயதில் கோக்க-கோலா கம்பனியின்(Coca-Cola company) ஏழு சதவீகித பங்குகளை (7 percentage of shares) பில்லியன் டாலர்களுக்கு (Billion dollars) வாங்கினார். இது பஃப்ட்டுக்கு மிகுந்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்குகளாக விளங்குகியது

* 69ஆம் வயதில் இவர் Money manager என்று கார்ஜன் குருப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (survey by the Carson Group in 20th century)

* 75ஆம் வயதில் தனது பெர்க்சயர் நிறுவனத்தின் 85% பங்குகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தார்.இதில் பெரும்பான்மையான பங்குகள் பில் கேட்ஸ் மணைவின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசனுக்கு (Bill and Melinda Gates Foundation) கொடுக்கப்பட்டது.

* 77ஆம் வயதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெயர் பெற்றார். (Buffett becomes the richest man in the world according to Forbes) submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/warren-buffet.html"

Thursday, 24 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 24.12.2009


இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 0.82 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.82 சதவீதம் (26.76 புள்ளி) உயர்ந்து 3,292.76 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.88 சதவீதம் (32.91 புள்ளி) உயர்ந்து 3,777.24 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 868.3 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 24.12.2009
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 24.12.2009
வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 350.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 61.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 411.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/24122009.html"

Wednesday, 23 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 23.12.2009

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.45 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.45 சதவீதம் (14.82 புள்ளி)சரிந்து 3,266.00 புள்ளியிலும் , மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.34 சதவீதம் (12.69 புள்ளி)சரிந்து 3,744.33 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.3 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 23.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 23.12.2009
புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 493.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 47.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 541.7 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/23122009.html"

Tuesday, 22 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 22.12.2009


இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.44 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.44 சதவீதம் (46.54 புள்ளி) உயர்ந்து 3,280.82 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.84 சதவீதம் (67.74 புள்ளி) உயர்ந்து 3,757.02 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.44 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 22.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 22.12.2009

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 487.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 185.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 673.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/22122009.html"

* செல்வம் சேர்க்கும் வழிகள்


  1. தொழில் செய்தல்.

  2. கல்வி கற்று நிபுணத்துவம் பெறுதல் (Educational Experts).

  3. பணத்தைக் கொண்டு பணம் சேர்ப்பது எப்படி? (Money should earn more money).

  4. செய்யும் தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துதல்.

  5. திறம்பட வேலை செய்யுங்கள் (Work more effciently).

  6. தொழிலில் ஈட்டிய செல்வத்தை,தொழிலில் முதலீடு செய்யுங்கள்.

  7. முதலீடு செய்தல்(Investing).

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_22.html"

Monday, 21 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 21.12.2009


இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 1.43 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.43 சதவீதம் (45.46 புள்ளி) உயர்ந்து 3,234.28 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.62 சதவீதம் (58.80 புள்ளி) உயர்ந்து 3,689.28 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.01 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 21.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 21.12.2009

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 295.6 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 170.6 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 466.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/21122009.html"

* நானும் ஒரு நட்ச்சத்திரம்

இவ்வாரத்திற்கான (21-12-2009 முதல் 27-12-2009) யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள், யாழ்தேவி நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தமிழில் பங்குச்சந்தைப் பற்றி என் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், ஆனால் பதிவுலகம் இதை மட்டுமல்ல பல அனுபவங்களையும் எனக்கு கொடுத்தது என்றால் மிகையில்லை. எத்தனை அனுபவங்கள்! கணக்கு வழக்கில்லாமல்!

மிக குறுகிய காலத்தில் நான் எழுதிய பல இடுகைகள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

எனக்கு பதிவுலகம் கற்று கொடுத்த பெரிய பாடம் விமர்சனத்தை எதிர் கொள்வது, நாம் எழுத வந்து விட்டாலே விமர்சனத்தையும் எதிர் கொள்ள பழகி கொள்ள வேண்டும். அப்போது தான் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முடியும்.

பதிவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பது, எனக்கு மிக்க மனநிறைவைத் தருகிறது.

என்றும் என்னை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும் என் பிரியத்துக்குரிய, என் மீது பிரியமான அனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும்..... submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_21.html"

Friday, 18 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 18.12.2009


இலங்கை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை இன்று 1.73 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.73 சதவீதம் (54.35 புள்ளி) உயர்ந்து 3,188.82 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.10 சதவீதம் (74.73 புள்ளி) உயர்ந்து 3,603.48 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.14 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 18.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 18.12.2009

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 99.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 85.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 185.3 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 14.12.2009 முதல் 18.12.2009 வரை

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 14-12-2009 முதல் 18.12.2009 வரை

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/18122009.html"

* இலங்கைக்கு உலக வங்கி உதவி

இலங்கைக்கு 77 மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்கும் ஒப்புதலை உலக வங்கி நேற்று(17.12.2009) வாசிங்டனில் வழங்கியது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நலத்திட்டங்களுக்காக 65 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு,கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், மற்றும் உள்ளுர் பாதைகளை சீரமைத்தல், உட்பட்ட வருமான மற்றும் விவசாய வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி உபயோகிக்கப்படவுள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_1772.html"

* இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்

இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சலுகைத் திட்டத்தை நீட்டிப்பதற்கு தேவையான முக்கிய நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கிறிஸ்டியன் ஹோமான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை சர்வதேச மனித உரிமை சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சில நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இலங்கைக்கான சலுகைத் திட்ட நீட்டிப்பை இரண்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_18.html"

Thursday, 17 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 17.12.2009


இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 1.46 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.46 சதவீதம் (45.02 புள்ளி) உயர்ந்து 3,134.47 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.54 சதவீதம் (53.77 புள்ளி) உயர்ந்து 3,555.75 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 918.36 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 17.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 17.12.2009

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 6.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 112.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 106.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/17122009.html"

* கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


நியுயோர்க் நகரில் வோல்ஸ்ரிட்(Wall Street) என அறியப்படும் உலகின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் இடத்தில், புகழ்பெற்ற அமெரிக்க பங்குச் சந்தையில் அதிசய இளைஞன் என அறியப்படட்டவர் (wonder boy of wall street) ராஜ் ராஜரட்ணம்.


பங்கு பத்திர மோசடி, நிதி ரீதியான சூழ்ச்சி, என்பன அவருக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க பெடரல் யூரி சபையில் 16-12-2009 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து 36 பக்கங்களுடனான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க நீதிமன்றமொன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் பாரிய நிதி மோசடி வழக்காக இந்த வழக்கு கருதப்படுகிறது.

எனினும் தற்போது 100 மில்லியன் டொலர் பிணையில் வந்துள்ள ராஜ் தனது பங்குதரர்களுக்கு விடுந்த வேண்டுகோள்களையும் மீறி அதிகமானோர் நிதியத்தில் இருந்து பணத்தை மீளப்பெற்றதனால் இவரின் கல்லன் குருப் நிதியத்தை மூடத்தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_17.html"

Wednesday, 16 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 16.12.2009


இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 0.41 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.41 சதவீதம் (12.49 புள்ளி) உயர்ந்து 3,089.45 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.02 சதவீதம் (0.87 புள்ளி) உயர்ந்து 3,501.98 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 5.28 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 16.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 16.12.2009

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 2.36 பில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 4.75 பில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 2.39 பில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/16122009.html"

Tuesday, 15 December 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 15.12.2009


இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.22 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.22 சதவீதம் (37.18 புள்ளி) உயர்ந்து 3,076.96 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.59 சதவீதம் (54.63 புள்ளி) உயர்ந்து 3,501.11 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.41 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 15.12.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 15.12.2009

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 15.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 765.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 749.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/15122009.html"