Showing posts with label பிரித்தானியா. Show all posts
Showing posts with label பிரித்தானியா. Show all posts

Tuesday, 8 February 2011

* பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வு

பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக பிரித்தானியாவில் தங்கத்தின் விலை கடந்த மாதம் ஒரு அவுன்ஸ் 882 ஸ்டெர்லிங் பவுணாக அதிகரித்திருந்தது. இது 2007ல் இருந்த விலையிலும் பார்க்க இரு மடங்கு அதிகமானதாகும்.

இதேவேளை தங்கம் மீதான முதலீடு ஒரு காலத்தில் ஆபத்தானாதாக கருதப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் மீதான முதலீடு எப்போதுமே சிறந்த ஒரு முதலீடு என்று கருதப்படுகின்றது. தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில், புதிதாக தங்கம் விளையும் இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிரிட்டனுக்குச் சொந்தமான வட அயர்லாந்திலுள்ள தொழில்படு நிலையில் இருந்த ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை 2007ல் கனேடிய நிறுவனமான கலண்டாஸ் பொறுப்பேற்றது. "ஒமாக்" என்பதே இந்தத் தங்கச் சுரங்கத்தின் பெயராகும். இந்த தங்கச் சுரங்கம் 1998ல் ஐ.ஆர்.ஏ கொரில்லாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி 29 பேர் பலியானார்கள்.

எனினும் இச்சுரங்கத்தில் பிரிட்டிஷ் மகாராணி உட்பட பலர் முதலீடு செய்துள்ளனர். தங்கத்துக்கான உலகச் சந்தை நம்பிக்கையூட்டுவதாக உள்ளதென்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகின்றார்.

பிரிட்டனில் ஒரு அவுன்ஸ் தங்கம் 158 ஸ்டெர்லிங் பவுணுக்கு ஒரு காலத்தில் விற்கப்பட்டது. தற்போது அதன் விலை 800 ஸ்டெர்லிங் பவுணுக்கும் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் ஆக்கம் உதயன் இணையத்தில்


submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_08.html"

Monday, 6 December 2010

* பிரித்தானியாவில் 7லட்சம் பேர் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம்

ஒரு பக்கம் அரசின் 40 சதவீத செலவீனக் குறைப்பு நடவடிக்கை மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான நன்மைகள் ரத்து ஆகியவற்றால் ஆட்டங்கண்டுள்ள பிரித்தானியர்களில் பலர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதற்கொண்டு அதிகப்படியான வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பிரித்தானியக் குடும்பங்களின் பொருளாதார நிலை மேலதிக பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி என்பதையும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம் எனவும் நிபுணர் தரப்பு எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் 43,875 பவுண்ஸ் வருமானமீட்டுபவர்கள் தான் அதிகப்படியான வரி செலுத்துபவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இந்த வரம்பு அடுத்த வருடம் முதற்கொண்டு 42,475 பவுண்ஸ் என குறைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவர் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/7.html"

Wednesday, 1 September 2010

* பிரித்தானிய வங்கிகளில் 2014 வரை மிக குறைந்த வட்டி வீதமாகவே பேணப்படும்

2014 வரை 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இங்கிலாந்து வங்கி தன்னுடைய பணிகளை தொடர வேண்டிய நிலையில் உள்ளது என பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.


அரசு செலவீனக் குறைப்பை தொடங்கியுள்ளதால் அதை திறம்பட சமாளிப்பதற்காக வட்டி வீதத்தை அதிக படுத்த முடியாத நிலையில் இங்கிலாந்து வங்கி உள்ளது என ஒரு பொருளாதார கணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் இது குறித்த பல வேறுபட்ட கருத்துக்களும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அடுத்த வருடத்திலிருந்து இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கத் துவங்கும் என சட்டம் பொறுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டிலிருந்தே இங்கிலாந்து வங்கி 0.5 வீதம் என்ற மிக குறைந்த வட்டியிலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/09/2014.html"

Tuesday, 3 August 2010

* பிரித்தானியர்கள் ஒவ்வொருவரும் £65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடனாளிகள்

பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கடன் சுமையை பிரித்துப் பார்க்கும் போது நாட்டில் இருக்கக்கூடிய ஆண், பெண், குழந்தைகள் என ஒவ்வொருவர் மீதும் 65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி நாட்டிற்கு இருக்கும் மொத்த கடன் தொகை மட்டும் 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆய்வாளர்கள் கணித்து கூறிய தொகையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். சராசரியாக பார்க்கப்போனால் ஒவ்வொரு குடும்பமும் இந்த பெருங்கடனை தீர்க்க ஐந்து வருடம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வரிப் பாக்கித் தொகைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக ஏற்படும் ஓய்வூதிய இழப்பீடு, அரசு ஓய்வூதிய திட்டங்கள் , தனியார் நிதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் கடன் தொகை, பொருளாதார சீரழிவால் முடங்கிப் போன வங்கிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகைகள் இவை போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த இறுதி புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு சொத்துக்களின் மதிப்புக்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புக்கள் அனைத்தும் முறைப்படி கணக்கிடப்பட்டு மொத்தமாக வந்த தொகையிலிருந்து கழிக்கப்பட்ட பின்னரே இந்த 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் பெறப்பட்டுள்ளது என்றும் புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது சிட்டி திங் பேங்க் என்ற பொருளாதார ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட 2 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என்ற மதிப்பை விட இரட்டிப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/65000.html"

Monday, 26 July 2010

* புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்

எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.

இரண்டு வருடங்களாக வேலையின்றி அரசு கொடுக்கும் நன்மைகளைப் பெற்று வாழ்ந்து வந்த பிரித்தானிய இளைஞர் 23 வயதான மார்க் வீல்டன். அரசு அளிக்கும் நன்மைகளிலேயே வாழத் தொடர விரும்பாத இவர் நேற்று புதிய உத்தி ஒன்றை கடைப்பிடித்தார். பலரும் பயணிக்கக் கூடிய சாலையில் " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டார்.

மிக வேகமான பணி நேரத்தில் அந்த சாலையில் சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் இதைக் கவனித்தனர். மழையையும் பொருட்படுத்தாது அந்த இளைஞர் நின்றது அனைவராலும் பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த பின் அந்த வழியே வாகனத்தில் சென்ற மரவேலைகள் தொடர்பான நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மார்க் வீல்டனிடம் நேர்காணல் நடத்தி 20 நிமிடங்களுக்குப் பின் அவருக்கு பணி நியமனமும் அளித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_26.html"

Friday, 23 July 2010

* அரசாங்க செலவுக் குறைப்பால் பிரித்தானியாவில் குற்றச் செயல்கள் பெருக வாய்ப்பு

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் செலவீனக் குறைப்புக்களும்
,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு துறைகளையும் போலவே காவல்துறைக்கு நிதி அளித்து வரும் உள்துறையிலும் 25 சதவீத செலவீனக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையில் அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம் 12 சதவீத நிதியை சேமிக்க முடியும் என்றும் 25 சதவீத குறைப்பு என்பது மிகவும் அதிகப்படியானதால் காவலர்கள் திறமையுடன் பணியாற்ற முடியாத சூழல்கள் ஏற்படுவதோடு குற்றங்கள் பெருகும் என எச்சரித்துள்ளார் சர் டெனிஸ் ஒ கொன்னோர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் அரசும் , உள்துறை அமைச்சகமும் இணைந்து காவல்துறையில் செலவை குறைப்பதை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_23.html"

Tuesday, 20 July 2010

* பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதிய உயர்வு 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு

பிரித்தானியாவில் வருடத்திற்கு 21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெற்றுகொண்டு பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு அவர்களை பாதுகாக்கும் விதமாக 250 பவுண்டுகள் சம்பள உயர்வாக அளிக்கப்படும் என அமைச்சர்கள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தனர். இது போன்று சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதன் விளைவாக பலர் தங்கள் வேலையை இழப்பது தடுக்கப்படுமென அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப தான் ஊதியம் அளிக்கப்படுகிறதே தவிர அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என சில தொழிலாளர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறைவான ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு இந்த இரண்டு வருடங்களில் குழந்தைகளுக்கான தொகை அதிகம் கொடுப்பதன் மூலமாக உதவப்படும் என்றும் அரசுக் கருவூல தலைமை செயலர் டன்னி அலெக்சாண்டர் மேலும் கூறியுள்ளார்.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):-பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதியம் 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/2.html"

* பிரித்தானியாவில் வங்கிகளாக செயல்பட உள்ள தபாலகங்கள்

பிரித்தானியாவின் இயந்திரமயமான வாழ்க்கைக்கு இடையே வங்கிகளுக்கு சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தபால் நிலையங்களும் இனிமேல் சிறிய வங்கிகளாக செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு மக்களுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தங்கள் அடிப்படை கொடுக்கல் வாங்கல் தேவைகளுக்கு தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என பிரித்தானிய அரசு இன்று அறிவித்துள்ளது.வங்கியிலிருந்து பணம் எடுப்பது, பாக்கித்தொகையை சரிபார்ப்பது, காசோலைகளுக்கு பணம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் இதில் அடங்கும். நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருமே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என தபால் விவகார அமைச்சர் எட்வர்ட் டவே தெரிவித்தார்.

அதிகப்படியான மக்கள் தபால் நிலையங்களை பயன்படுத்தும் போது தபால் நிலையங்களின் சேவைகளும் அதிகரிப்பதுடன் மக்களின் நேர விரயமும் இதனால் குறையும் என நம்புவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார். இந்த முறையை நாட்டில் உள்ள பிரபல வங்கிகள் வரவேற்றுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_20.html"