பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.
சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_19.html"
இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐபேட்(iPad) வாங்குவதற்காக பல மணி நேரம் முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8 மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கிவிட்டனர்.
பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு செய்து ஒரு ஐபேட் வாங்கினார். ஏற்கனவே அமெரிக்காவில் ஒன்றை அவர் வாங்கியிருந்தார். இப்போது மீண்டும் வேறு ஒரு மாதிரி ஐபேட் வாங்கியுள்ளார். இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று நிரூபர்கள் கேட்டதிற்கு நான் இதைக் கொண்டு போய் தடவப் போகிறேன் என்றார். ஆம் தொடு திரைத் தொழில் நுட்பம் தடவுவதன் மூலம் இயங்கும். அதை அவர் அப்படி நகைச் சுவையாகச் சொன்னார்.
ஐ-பொட், ஐ-போன், ஐபேட் ஆகியவற்றை வெற்றீகரமாகச் சந்தைப் படுத்தியதால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் பெறுமதி மதிப்புயர்வைப் பெற்றுள்ளன. கடந்த் 10 ஆண்டுகளில் அவற்றின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு இப்போது $222bn (£152.5bn) ஆக உயர்ந்துள்ளது. இதனால்தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுமதி வரிசையில் இதுவரை முதலாம் இடத்தில் இருந்த மைக்ரோசொfர் இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டு ஆப்பிள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. மைக்ரோசொfரின் சந்தை மதிப்பு $219bn (£150.5 bn).
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/ipad.html"
அன்றைக்கு மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகள் எதுவும் வேலைக்காகவில்லை. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது.. ஆப்பிளின் பரம எதிரி எனப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்!.
கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு பணியை பில்கேட்ஸ் செய்தார். வாக்குரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமலிருந்ததுதான்!). அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை.
அமெரிக்க நிறுவனங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது ஆப்பிளுக்கு. அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள மைக்ரோசாப்ட்.
நிச்சயம் தனது நிறுவனத்துக்கு இப்படியொரு நிலை வரும் என்று பில்கேட்ஸ் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்கிறது அமெரிக்காவின் பிரபல பத்திரிகை. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பார்களே... அப்படி ஒரு நிலை பில்கேட்ஸுக்கு. காரணம், ஆப்பிளில் முதலீடு செய்யுமாறு கூவிக் கூவி அழைத்தும் ஒரு டாலர் தரக்கூட ஒருவரும் முன்வரவில்லை அன்றைக்கு!
அன்று ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு பில்கேட்ஸ் தேவைப்பட்டார். இன்று சரிவிலிருந்து நிமிர பில்கேட்ஸுக்கு ஒரு ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer) (மைக்ரோசாப்ட்டின் இன்றைய CEO) மட்டும் போதாது, ஸ்டீவ் ஜாப்ஸ்களும் தேவை என்று கமெண்ட் அடித்துள்ளது அந்தப் பத்திரிகை.(Jobs then needed Bill Gates far more than Gates needed Jobs. )
நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட் - யாஹூ இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தை ஒரு வழியாக சாதகமான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டுதான் முதல் முறையாக யாஹூவை வாங்கும் தன் விருப்பம் மற்றும் அதற்கான தொகை குறித்து அறிவித்தது மைக்ரோசாப்ட். ஆனால் அந்த ஆண்டு விஷயம் சாதகமான முடிவுக்கு வராததால், மீண்டும் 2007ம் ஆண்டு இதுகுறித்த பேச்சில் இறங்கியது. 2008ம் ஆண்டு யாஹூவின் பங்குகளுக்கு 47.5 பில்லியன் டொலர் வரை தர முன்வந்தது மைக்ரோசாப்ட்.
ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை யாஹூ. பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2008ம் ஆண்டு மே மாதம் யாஹூவின் பங்குகள் விலை சரிந்து 33 டாலராகிவிட்டது. நேற்று யாஹூ பங்குகள் விலை மேலும் சரிந்து 16.32 டொலராகிவிட்டது.
இவர்களின் இந்த குழப்பமான நிலை கூகுளுக்கு பெரும் சாதகமாக அமைய, அசைக்க முடியாத பலத்துடன் முதலிடத்துக்கு வந்துவிட்டது கூகுள்.
இப்போது கூகுளை மிஞ்ச வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், யாஹூவும் மைக்ரோசாப்டும் மீண்டும் புதிய இணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. இதன்படி 10 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் கைகோர்த்து இயங்கும். அதன் மூலம் யாஹூ தேடியந்திரத்துக்கு கூடுதல் பலம் கிடைப்பதோடு, கூகுளுக்கு சரியான போட்டியாகவும் அமையும்.
இந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதில் தமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அமெரிக்க அரசும் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கூகுள் தேடியந்திரமே 3-ல் 2 பங்கு பயனாளர்களைக் கொண்டுள்ளது.
ஆனால் யாஹூவுக்கு 7.4 சதவீதமும் சீனாவின் பெய்டு தேடியந்திரத்துக்கு 7 சதவீகிதமும், மைக்ரோசாப்டின் பிங் சர்ச் என்ஜினுக்கு வெறும் 3.2 சதவீகிதமும் மட்டுமே பயனாளர்கள் உள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் அதிக பயன் யாஹூவுக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. முதல் 5 ஆண்டுகளுக்கு வரும் விளம்பர வருவாயில் 88 சதவீதம் யாஹூவுக்கே கிடைக்கும். தவிர, இந்த ஒப்பந்தத்துக்காக யாஹூவுக்கு 150 மில்லியன் டொலர்களை தருகிறது மைக்ரோசாப்ட். தவணை முறையில் இந்தத் தொகை தரப்படுமாம்.
தவிர, யாஹூவின் 400 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க பயனாளர்கள் யாஹூ தளத்தில் தேடத் துவங்கினால், அது தானாகவே மைக்ரோசாப்ட் தளத்துக்குப் போகும் அளவு வேலைகள் நடந்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹூ முழுமையாக மைக்ரோசாப்ட் கைக்குப் போய்விடும்.