Monday 28 June 2010

* பிரிட்டனில் வேலையில்லா நிலை 10 சதவிகிதத்திற்கு உயரும் அபாயம்

கன்சர்வேடிவ்-லிபரல் கூட்டணி அரசாங்கம் பொதுச் செலவை குறைப்பதற்கான அதன் திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே,பிரிட்டனில் வேலையில்லா நிலையை 10 சதவிகிதத்திற்கு மேல், அதாவது 3 மில்லியன் உயரக் கூடும் என்ற மதிப்பீட்டைக் கொடுத்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.

The Chartered Institute of Personnel and Development (CIPD) வரவிருக்கும் குறைப்புகளால் 725,000 க்கும மேலான வேலைகள் ஆபத்திற்கு உட்படக்கூடும், பிரிட்டன் முழுவதும் பொதுத் துறையில் 12 சதவிகிதம் அல்லது 6 மில்லியன் தொழிலாளர்கள் இதில் அடங்குவார்கள் என்று கணித்துள்ளது. தற்பொழுது 2.5 மில்லியன் என்று இருக்கும் வேலையின்மை 2012 க்குள் 3 மில்லியனை அடையும், அந்த அளவிலேயே 2015 வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.

CPID ஆனது வரிகளை உயர்த்துவது என்பதற்குப் பதிலாக, செலவு குறைப்பதானது வேலை நெருக்கடியை இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் நிதியப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில் 'சேமிப்புக்களில்' கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை செலவுகளை குறைப்பதன் மூலம் கொண்டுவர விரும்புகிறார். மிகுதி 20 சதவிகிதம் மட்டுமே வரி உயர்வின் மூலம் அடையப்படும்.

மொத்தத்தில் CIPD, மேலாளர் மற்றும் நிர்வாகப் பகுதியில் தேசிய சுகாதாரப் பணி (NHS)இல் 175,000 பணிகளும், ஆட்சித்துறை, கல்வித்துறைகளில் 200,000 பணிகளும் உள்ளூராட்சிப் பதவிகளில் 350,000 இழக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. தேர்தலுக்கு முன்பு, கன்சர்வேடிவ்கள் அதிக செலவு கொடுக்கும் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களில் குறைப்புக்கள், ஆலோசகர்களின் குறைப்புக்கள் ஆகியவற்றின் மூலமும், முன்னணிப் பணிகளைப் பாதுகாப்பதன் மூலமும் சேமிப்புக்கள் அடையப்படலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் பதவிக்கு வந்த உடனேயே, பிரதம மந்திரி டேவிட் கெமரோன் பொதுச் செலவுகளில் இருந்து 6.25 பில்லியன் பவுண்டுகள் நிதியைக் குறைத்தார்.


இத்தகைய அளவுகளில் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைப்பது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, பொதுத்துறையில் இருந்து வெளியே இருப்பவர்களுக்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுக்கும். பல பொதுத்துறைப் பணிகளின் மூலம் ஒப்பந்த வேலையைக் கொண்டவர்கள் 1.7 மில்லியன் தொழிலாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்கள் குப்பை சேகரித்தல், தூய்மைப்படுத்துதல், ஓய்வு வசதிகளை நிர்வகிப்பவர்கள், பள்ளிகளில் உணவு அளிப்பவர்கள் என்று உள்ளனர். போக்குவரத்துத் துறையில், குறிப்பாக தேசிய ரயில் பணியிலும் பல உள்ளூர் பஸ் சேவைகளும் அரசாங்கத்திடம் இருந்து வரும் அதிக உதவித் தொகைகளைப் பெரிதும் நம்பியுள்ளன.


அரசாங்க ஆதரவு அகற்றப்படுவது என்றால் இத்தொழிலாளர்களில் பலர் ஒப்பந்தங்கள் குறைக்கப்படும்போது உதவி நிதிகள் கொடுக்கப்படுவது இல்லை. ஏற்கனவே இந்த ஆண்டு 1.7 பில்லியன் பவுண்டுகளைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. அதற்காக அது அளிப்பாளர்களிடமும் மற்ற அமைப்புக்களுடனும் ஒப்பந்தங்கள் பற்றிய மறு பேச்சு, வரவு-செலவுத் திட்ட வார்த்தைகள் நடத்த உள்ளது.இத்தகைய குறைப்புகளால் நேரடி விளைவு தனியார் துறையிலும் உணரப்படும். அங்கு பல நிறுவனங்களும் பொது அதிகாரங்களுடன் வணிகத் தொடர்பை நம்பியுள்ளன. இதன் பொருள் இன்னும் உயர்ந்த வேலையில்லா நிலை என்ற அச்சுறுத்தல் ஆகும்.

வேலையில் இருந்து நீங்கிவிட்ட தொழிலாளர்கள் மிகக் குறைந்த பொதுநல முறையைத்தான் எதிர்கொள்ளுவர். ஆண்டு ஒன்றுக்கு 4 பில்லியன் பவுண்டை அரசாங்கம் பொதுநலத் தரங்களை முடக்குவதன்மூலம் சேமிக்க முயல்கிறது. இதைத்தவிர இன்னும் அதிகமும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் செலவுப் பரிசீலனைக்குள் நலன்கள், வரிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றையும் உள்ளடக்க அது முடிவெடுத்துள்ளது. இதன் பொருள் ஏற்கனவே மிகக் குறைந்த சமூக ஆதரவுத் தளம் கொண்டுள்ள மிக நலிந்தோர் சமுதாயத்தில் இன்னும் குறைவான நலன்களைத்தான் பெறுவர் என்பதாகும்.

குழந்தைகள் நலன்கள், இயலாதவர்களுக்கான நலன்கள், வேலையின்றி இருப்பவர்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கம் உதவி நலன்களைப் பெறுவதற்கான தகுதிகளைக் குறைக்க வழிவகைகளை அரசாங்கம் முடிவெடுத்தாலும், அப்படியே நலன்களின் தரங்களைக் குறைத்துவிடவும் அது முடிவெடுக்கலாம்.

பொதுப் பணிகள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றில் குறைப்புக்களைக் கொண்டு வரும் உந்துதலில், அரசாங்கம் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு (CBI) உடைய ஆதரவைப் பெற்றுள்ளது. CBI ஆனது நிதி மந்திரி இன்னும் கடுமையான குறைப்புக்களை, இப்பொழுது அறிவித்தவற்றைவிடத் தீவிரமாக அறிவிக்க வேண்டும், அதுதான் வரி உயர்வைத் தவிர்க்கும் என்று கூறியுள்ளது.

CBI வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "வணிகக் குழு பற்றாக்கறையைச் சமாளிப்பதற்கு இதுவரை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கிறது. வரவு-செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் நிதிய நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு, இன்னும் விரைவான விதத்தில் கட்டுமானப் பற்றாக்குறையில் குறைப்பு, இன்னும் கடுமையான பொருளாதார முன்கருத்துக்களை ஏற்றல், செலவுத் திட்டங்களை இன்னும் விரிவாக்குதல் இதற்குத் தேவை" என்று வாதிட்டுள்ளது.

OBR எனப்படும் வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம், பிரிட்டனின் பொருளாதாரம் பற்றிச் "சுதந்திர" கணிப்புக்களை அளித்தல், செலவு முடிவுகள் பற்றி ஆலோசனை கூறல் ஆகியவற்றிற்காக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, கடன் வாங்குதல், வளர்ச்சிக் கணிப்புக்கள் பற்றித் திங்களன்று அறிவிப்பை வெளியிடும். இது பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்கள் 2011, அதற்கு அப்பால் கீழிறக்கும். அதைத்தவிர தற்பொழுதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகித வளர்ச்சி என்பதும் 2 ஐ ஒட்டிக்குறைக்கப்படும் என்ற ஊகம் வந்துள்ளது. இதையொட்டி ஒப்புமையில் பிரிட்டனின் கடன் அளவு பெருகும்.

ஐரோப்பா முழுவதும் இதே போன்ற திட்டங்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதுவும் இந்த வாரம் 80 பில்லியன் யூரோச் செலவுகள் ஜேர்மனியில் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காமரோன் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் அதன் பொறுப்பைக் கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/10.html"

Wednesday 16 June 2010

* உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல்

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டொலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் வாசிக்க:- உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_16.html"

Tuesday 15 June 2010

* புதிய ஐபோன்-4G ஜூன் 24 முதல் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது.

ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/4g-24.html"

Monday 14 June 2010

* அம்பானி சகோதரர்கள் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை செல்கின்றனர்

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி சகோதரர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி சகோதரர்களின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.

தகவல்:-The Official Government News Portal of Sri Lanka submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_14.html"

Tuesday 8 June 2010

* 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட் விற்பனை

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் விற்பனைக்கு வந்து 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள். ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod),ஐபோன் (i Phone) முதல் 2 மாதங்களில் முறையே 125,000,820,000 விற்பனை ஆனது என்கிறார் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 8.13 மில்லியன் ஐபேட்கள் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபேட்களுக்கு கிடைத்துள்ள பிரவேற்பைத் தொடர்ந்து டெல், சோனி, ஹெச்பி போன்ற நிறுவனங்களும் ஐபேட் போன்ற டேப்லட் பிசிக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/2-2.html"

Friday 4 June 2010

* மலேசிய TOP பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!


பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரு தமிழர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவில் 40 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் 2 தமிழர்களும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் அனந்த கிருஷ்ணன். இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் டொலர் . 72 வயதான இவர் மலேசியாவில் செல்போன் இணைப்பு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். உலகத்திலேயே உயரமான கட்டடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் டவர் உரிமையாளர்களில் இவரும் ஒருவர்.

இதுதவிர இவருக்குச் சொந்தமாக சாட்டிலைட் டி.வி.சேனல்களும் உள்ளன.

கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்ற இன்னொரு தமிழர் ஏ.கே.நாதன். 54 வயதான இவர் உலோக உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ளார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/2.html"

Thursday 3 June 2010

* இலங்கையின் இறக்குமதி வரியின் விபரங்கள்

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


(படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_03.html"

Wednesday 2 June 2010

* இலங்கையில் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுங்கவரி, 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களுக்கு துறைமுக வரி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் வரி ஆகியவை மட்டுமே விதிக்கப்படும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் மேலதிக வரி ஆகியவை இந்த பொருட் களுக்கு விதிக்கப்படமாட்டா.

உள்ளூர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திரிபு வரி குறைக்கப்பட்டுள்ளது. முறையற்ற இறக்குமதி போட்டித் தன்மையில் இருந்து பாதுகாப்பு தேவைகளை உள்ளூர் நடவடிக்கைகளை குறிப்பிட்ட இறக்குமதி பாதித்தால் மட்டுமே இந்த வரி தொடர்ந்து செலுத்த ப்பட வேண்டியிருக்கும். மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் இறக்குமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவற்றின் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட் குவிப்புக்கு எதிரான சட்டம், லேபல் இடுதல் தொடர்பான சட்டம், தரமான பொருட்களை இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் சூழல் மாசடைவதை குறைப்பதற்கும் உள் ளூரில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கமானது இலகுவான வரிக் கட்டமைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி நிலையில் விசேட பொருட்கள் வரிக்கு மட்டுமே உரித்தாகும். இது சிறிய வர்த்தகர்களுக்கான நிர்வாக நடைமுறைகளை பெரிதும் குறைக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/50.html"

Tuesday 1 June 2010

* தமன்னாவுடன் போட்டி போடும் த்ரிஷா,ஸ்ரேயா,ரீமா சென்,அஞ்சலி யாருக்கு வெற்றி??

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் - 2010




விபரங்களுக்கு


வாக்களிக்க submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post.html"