Showing posts with label முதலீடு. Show all posts
Showing posts with label முதலீடு. Show all posts

Tuesday, 8 February 2011

* இலங்கையின் ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 2010 நவம்பரில் 834 மில்லியன் ஐ.அ.டொலரால் அதிகரித்துள்ளது. இது 2009 நவம்பருடன் ஒப்பிடுகையில் 36 வீத வளர்ச்சி என்பதுடன் 2004 ஒக்டோபருக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆகக் கூடிய தொகை என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.


ஏற்றுமதி வருமானத்தில் கைத்தொழில் ஏற்றுமதிகள் (76வீதம்) பிரதான இடத்தினை வகிக்கின்றது. இதற்கு புடவை மற்றும் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதாகும். இதேவேளை 2010ன் முதல் 11 மாதங்களில் மொத்தமாக ஏற்றுமதி வருமானம் 7,339 மில்லியன் ஐ.அ.டொலராக காணப்படுவதுடன், இது 2009ம் ஆண்டை விட 15.4 வீதம் அதிகமாகும்.

எனினும் 2009 உடன் ஒப்பிடுகையில் 32.6 வீதம் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளது. அதாவது 2010ன் முதல் 11 மாதங்களில் இறக்குமதிச் செலவுகளின் அளவு 12,083 மில்லியன் ஐ.அ.டொலர் என பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_5234.html"

* பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வு

பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக பிரித்தானியாவில் தங்கத்தின் விலை கடந்த மாதம் ஒரு அவுன்ஸ் 882 ஸ்டெர்லிங் பவுணாக அதிகரித்திருந்தது. இது 2007ல் இருந்த விலையிலும் பார்க்க இரு மடங்கு அதிகமானதாகும்.

இதேவேளை தங்கம் மீதான முதலீடு ஒரு காலத்தில் ஆபத்தானாதாக கருதப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் மீதான முதலீடு எப்போதுமே சிறந்த ஒரு முதலீடு என்று கருதப்படுகின்றது. தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில், புதிதாக தங்கம் விளையும் இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிரிட்டனுக்குச் சொந்தமான வட அயர்லாந்திலுள்ள தொழில்படு நிலையில் இருந்த ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை 2007ல் கனேடிய நிறுவனமான கலண்டாஸ் பொறுப்பேற்றது. "ஒமாக்" என்பதே இந்தத் தங்கச் சுரங்கத்தின் பெயராகும். இந்த தங்கச் சுரங்கம் 1998ல் ஐ.ஆர்.ஏ கொரில்லாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி 29 பேர் பலியானார்கள்.

எனினும் இச்சுரங்கத்தில் பிரிட்டிஷ் மகாராணி உட்பட பலர் முதலீடு செய்துள்ளனர். தங்கத்துக்கான உலகச் சந்தை நம்பிக்கையூட்டுவதாக உள்ளதென்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகின்றார்.

பிரிட்டனில் ஒரு அவுன்ஸ் தங்கம் 158 ஸ்டெர்லிங் பவுணுக்கு ஒரு காலத்தில் விற்கப்பட்டது. தற்போது அதன் விலை 800 ஸ்டெர்லிங் பவுணுக்கும் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் ஆக்கம் உதயன் இணையத்தில்


submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_08.html"

Tuesday, 3 August 2010

* அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி வேகம் இல்லை

அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையின்மைக்குக் காரணம் அங்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வளர்ச்சி இல்லாததே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், இதற்குக் காரணம், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது அல்ல என்றும், வேலை வாய்ப்புக் கோரி பதிவு செய்திருந்த 5 இலட்சம் பேர் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 83,000 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வேலையின்மையைப் போக்க வேண்டுமெனில் பல லட்சக்கணக்கான பணி வாய்ப்புகள் ஒவ்வொரு மாதமும் உருவாக வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.வீட்டுக் கடன் சிக்கலால் பாதிப்பிற்குள்ளான பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க அரசு செய்த உதவிகள் பெரிய அளவிற்கு வளர்ச்சியை உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

பொருளாதாரப் பின்னடைவி்ற்குப் பிறகு இரண்டாவது ஆண்டின் இரண்டாவது அரையாண்டு துவங்கியுள்ள நிலையில், அமெரிக்க அரசு செய்த ஊக்கமளிப்பு நிதியுதவிகளின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post.html"

Wednesday, 19 May 2010

* இந்தியா போகிறார் வார்ன் பப்ட் (Warren Buffet) ... முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வார்ன் பப்ட் (Warren Buffet) இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வார்ன் பப்ட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே வார்ன் பப்ட் முதலீடு செய்திருப்பது மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர் முதல் முறையாக இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பெர்க்ஷையர் ஹதாவேயின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வார்ன் பப்ட்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகிறார் வார்ன் பப்ட். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய வார்ன் பப்ட் திட்டமிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா. இந்த சூழலில் எந்த அளவு முதலீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் அனுமதிக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசியாவில் மூன்று நாடுகளில் மட்டுமே வார்ன் பப்ட் முதலீடு செய்துள்ளார். தென் கொரியாவின் போஸ்கோ, சீனாவின் பிட் மற்றும் இஸ்ரேலில் மட்டுமே இவரது முதலீடுகள் உள்ளன.

இந்தியாவில் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய பெர்க்சயர் ஹத்வே விரும்புவதாக பப்ட் தெரிவித்துள்ளார்.

பெர்க்சயர் ஹத்வே மறு காப்பீட்டு வர்த்தகத்தை தலைமையேற்று நடத்துபவர் அஜீத் ஜெயின் என்ற இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/warren-buffet.html"

Wednesday, 24 March 2010

* புத்தளத்தில் காற்றாலை மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு


புத்தளம் மாம்புரியில்(Mampuri areas of Kalpitya ) காற்றாலை மின்உற்பத்தி நிலையத்தை செனக் தனியார் நிறுவனம்(Senok Wind Power (Pvt) Ltd) நிறுவியுள்ளது.

10 மெகா வோர்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது 5 காற்றாலை மின்விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்தமாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின்விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_24.html"

Monday, 22 March 2010

* றைகம் வயம்ப உப்பு உற்பத்தி நிறுவன சாதாரண பங்குகளின் பொது வழங்கல்

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_22.html"

Saturday, 20 March 2010

* பணம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு என்பதுதான் சரி. ஆனால் நல்லது செய்யவும் பணம் தேவையே? நமது சமூகத்தில் பொதுவாக ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் பணக்காரர்கள் என்றால் ஏதோ கெட்டவர்கள் போலவும், பணம் இருந்தால் மன நிம்மதி போய்விடும் என்றும் சில எண்ணங்கள் உள்ளது. நல்ல வழியில் சம்பாதித்து நல்ல விஷயங்களுக்காக செலவிடப்படும் பணம் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும், அவனின் குடும்பத்துக்கும், அவன் சார்ந்த சமூகத்துக்கும் நல்லதே ஆகும்.

நாம் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? வேறு எவரிடமும் கை ஏந்தாமல் நமது சொந்த தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்துக்காக செலவிடவும் பணம் தேவை. இவ்வாறு ஒவ்வொருவரும் நல்ல முறையில் பணம் சம்பாதித்து சேமித்து வந்தால் அது அந்த நாட்டையே வளமாக்க உதவும்.

எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி... இப்பொழுது நாம் ஒரு வேலைக்கு செல்கிறோம் அல்லது நாமே சொந்தமாக தொழில் செய்கிறோம். பணம் நமக்கு சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ மாதந்தோறும் வருகிறது. அவரவர் வேலைகளுக்கு தகுந்தவாறு மாதம் ரூ. 50,000 மோ, ரூ. 100,000 மோ, ரூ. 200,000 மோ சம்பாதிக்கலாம். யார் பணக்காரர்?.... ரூ. 100,000 வருமானம் பெறுபவரா?.... மாதம் ரூ. 200,000 வருமானம் பெறுபவர் ரூ. 250,000 செலவு செய்தால், அதேப்போல் ரூ. 50,000 வருமானம் பெறுபவர் ரூ. 25,000 மட்டுமே செலவு செய்தால், இப்பொழுது யார் பணக்காரர்?.

ரூ. 50,000 வருமானம் பெறுபவர், தான் செலவு செய்யும் பணம் போக மீதியை என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதை, அவர் சேமிப்பு என்று எதை நினைக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் பொறுத்தே அமையும். ரூ. 50,000 வருமானம் பெறுபவர் சிறப்பாக திட்டமிட்டு சிறந்த முறையில் சேமித்தால், முதலீடு செய்தால், அவரே மாற்ற இருவரை விட குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம்.

ஆகவே ஒருவர் பணக்காரர் ஆவதை தீர்மானிப்பது ஒருவரது வருமானம் மட்டும் அல்ல, அவரின் செலவிடும் பழக்கமும், அவரின் சேமிக்கும் பழக்கமுமே ஆகும். சரி, இப்போது, பணத்தை எப்படி செலவிடுவது?... எப்படி சேமிப்பது?...

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/03/blog-post.html"

Friday, 19 March 2010

* பணத்தின் உண்மையான மதிப்பு

பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.


பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கிறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன்.

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.

அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ433.00.


ஆண்டு வருங்கால
மதிப்பு



தற்போதைய
மதிப்பு

1
100



95.2

2
100



90.7

3
100



86.4

4
100



82.3

5
100



78.4



மொத்தம்







433


யாராவது உங்களிடம் 100 ரூபாய் கடன் வாங்கி 5 வருடங்களில் திருப்பித்தரேன் என்றால்'' 78.4 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட வேண்டும்.(உதாரணத்துக்காக குறிப்பிடுகிறேன்)

சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எப்படி இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.

திரு.சங்கர் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் ஓட்டுனர் சம்பளம், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.


முதலாம் ஆண்டு முடிவில்:

கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.60,000

அதன் தற்போதைய மதிப்பு = ரூ.57,120

இரண்டாமாண்டு முடிவில்:

கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.50,000

அதன் தற்போதைய மதிப்பு = ரூ.45,350

மூன்றாமாண்டு முடிவில்:

கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.60,000
கார் விற்ற காசு = ரூ.150,000
மொத்தப் பணம் = ரூ.210,000

அதன் தற்போதைய மதிப்பு = ரூ.181,440

மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,120 + 45,350 + 181,440 = ரூ.283,910.


இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், சங்கரிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால்,ரூ.283,910 மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 284 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."

தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்..

வளம் பெறுவோம்.


பி.கு:

1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.

2. சங்கர் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)

3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_19.html"

Monday, 8 March 2010

* பவர் ஆப் அக்குமுலேசன் (Power of Accumulation)

இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.

1வது கட்டம் = 1 நெல்மணி

2வது கட்டம் = 2 நெல்மணி

3வது கட்டம் = 4 நெல்மணி

4வது கட்டம் = 16 நெல்மணி

5வது கட்டம் = 256 நெல்மணி

6வது கட்டம் = 65636 நெல்மணி

7வது கட்டம் = 4294967296 நெல்மணி

8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி

9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி

சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.

அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.

சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).

சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work

9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??

சும்மா கணக்கு போட்டு பாருங்க........



சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/power-of-accumulation.html"

Tuesday, 16 February 2010

* யாழ்ப்பாணத்தில் எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கிக்கிளை திறப்பு

எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கி யாழ்ப்பாணத்தில் தனது புதிய கிளையை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள 145 ஆம் இலக்கக் கட்டடத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைய்த்தது. இந்த வங்கிக் கிளையை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் திறந்து வைக்கிறார். இதில் பிரிட்டிஷ் தூதர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக்கலஸ் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

யாழ் குடாநாட்டில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாலும், அபிவிருத்தி நடைபெற்று வருவதாலும் பல தனியார், அரச வங்கிக் கிளைகள் கூட புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. இன்று முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது.






படங்கள் உதவி:-வீரகேசரி இணையம் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/hsbc.html"

Sunday, 24 January 2010

* முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக பதிவு...

வணக்கம் நண்பர்களே ,

கடந்த சில வாரங்களாக இலங்கை பங்குச்சந்தை உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே.இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .


ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன.அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .

இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு
சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் .

சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் .

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:-ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

(முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே)

உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_24.html"

Saturday, 23 January 2010

* பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?

இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முன்னைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான்.



பணத்தை இழப்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று:-

1. பேராசை



2. நிதானமின்மை




3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்



பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும்,எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.

நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள்.



நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும்.

உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_23.html"

Friday, 22 January 2010

* யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பங்குச் சந்தைக் கிளை திறக்கத் திட்டம்

வடக்கு,கிழக்குப் பகுதியில் உள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச்சந்தையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விவசாய வளம் மிகுதியாக இருக்கின்றது. எனவே அதைச் சார்ந்த உயிரியல் வேதியல், உரம் உள்ளிட்ட தொழிற்துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், இதன் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

இம்முயற்சியின் ஓர் அங்கமாகத் தற்போது யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச் சந்தையின் கிளையை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

அலுவலகக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பங்குச் சந்தை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் கிளை அலுவலகத்துக்கான கட்டிடம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுவிடும் என இலங்கை பங்குச்சந்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_22.html"

Tuesday, 12 January 2010

* செல்வம் சேர்க்க வளர்த்துக்கொள்ள வேண்டிய சீரிய சிந்தனைகளும் , செயல்பாடுகளும்.


  1. ஆசைப்படுங்கள்.

  2. தன்னம்பிக்கை (Self confidence).

  3. சூழ்நிலைகள் (Environment).

  4. குறிக்கோள்கள்-வழிமுறைகள் (Goal- Strategy).

  5. எண்ணங்களில் பழக்கங்களில் மாற்றம்.

  6. வாழ்க்கையின் சிறு கஷ்டங்களில் கவனம் செலுத்தாதீர்கள்-தீர்வுகளில் மனதை செலுத்துங்கள்.

  7. தாழ்வு மனப்பான்மையையும் எதிர்விளைவு எண்ணங்களையும் மாற்றுங்கள்.

  8. பயத்தைப் போக்குங்கள்.

  9. நேரத்தை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.

  10. நீங்கள் செய்கிற தொழிலை,மற்றவர்களைவிட 'மாற்றுமுறையில்' செய்யுங்கள் (You need not do different things;but,do'differently than others).

  11. நிர்வாகத் திறமையுள்ளவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  12. உங்களின் மூலதனம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.

  13. உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் (Own your responsibility).

  14. தவறு செய்தால் தவறு என்று ஒப்புக் கொள்ளுங்கள் (I made mistake).

  15. கவனியுங்கள் (Always Listen).

  16. விடாமுயற்சி.

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_04.html"

Wednesday, 6 January 2010

* பங்குச்சந்தை முதலீட்டைப் பற்றிய விளம்பரம்.

பங்குச்சந்தை முதலீட்டைப் பற்றி சமீபத்தில் நான் பார்த்த விளம்பரம்.


A picture is worth more than thousand words! submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_06.html"

Saturday, 2 January 2010

* பண வீக்கமும் முதலீடும்-02

* பண வீக்கமும் முதலீடும்-01

தற்போது அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையால் இரு வகை நிகழ்வுகள் நிகழும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கினர்.

1. Price Inflation (வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவை பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தல்)

2. Asset Deflation (வீடு, நிலம் மற்றும் பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு குறைதல்)

அதாவது நாம் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் பொருளின் விலை அதிகரிக்கும் ஆனால் நம்முடைய முதலீட்டின் விலை அந்த அளவுக்கு உயராது. இந்த நிலை தற்போதே இலங்கையில் வர தொடங்க உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலை நாடுகளில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை விட இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் குறைவாக இருக்கும்.

ஆனாலும் இதை பற்றி தற்போதைய நடுத்தர வயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் செலவிட என்று பல முதலீடுகளை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது நிலம், வீடு,மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை முதலீடு என்று. ஆனால் அவற்றின் உண்மையான மதிப்பு பண வீக்கத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் குறைந்திருக்கும். அப்போதைய விலை வாசியும் மிக அதிகமாக இருக்கும்.

இது போன்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்க பட போவது பணி ஓய்வு பெற்றவர்களாக இருப்பர். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சரிவால், பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தவர்கள் போதிய பணம் இல்லாததால் இன்னும் நிறைய ஆண்டுகள் தங்கள் தள்ளாத வயதில் வேலை செய்ய வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வு பற்றி டேனியல் அமெர்மேன் என்னும் பொருளாதார வல்லுனர் கூறுவதை கேளுங்கள்

If Your asset doubles in price, but a dollar will only buy what a quarter used to, then you didn’t double your money,you just lost half your savings, and any measures that doesn’t pick up on the difference isn’t worth using.



இது போன்ற நிகழ்வுகளால் மக்கள் பொருட்களின் பண வீக்கம் (price inflation)மற்றும் சேமிப்பு பண வடிதல்(asset defalation) ஆகிய இரண்டாலும் பாதிக்க படுவர். இந்த பாதிப்பு முக்கியமாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகம் இருக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/02.html"

Thursday, 31 December 2009

* பண வீக்கமும் முதலீடும்-01

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வரும் வருமானத்தை விட கூட ஆகும் செலவை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரடியாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.

சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க இயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.

பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளது. 1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்த போது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல் படுகின்றனர்.

இந்த பதிவு பண வீக்கத்தின் காரணத்தை ஆராய்வது இல்லை.

பண வீக்கமும் முதலீடும்-02 ல் தொடரும்....... submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/01.html"

Sunday, 27 December 2009

* சேமிப்பு Vs முதலீடு (Difference between savings and Investments)




சேமிப்பு (Savings)

முதலீடு (Investment)

சேமிப்பு என்பது வருமானத்தின் ஒரு பகுதி. இதன் மூலம் பலனை எதிர்பார்க்காமல், பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வங்கிகளில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது.

(Money will be safe)

லாபம் தரும் என்ற நம்பிக்கையில், வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஏதேனும் ஒரு பொருளின் (நிலம், வீடு, தங்கம், பங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்) மீது முதலீடு செய்வதே இன்வஸ்மெண்ட் ஆகும்.

இதில் பாதுகாப்பு நிறைய, லாபம் குறைவு.

(More safe, less profit)

முதலீடு உங்களுக்கு லாபகரமாகவும் அமையலாம், அதே சமயம் நட்டமும் ஏற்ப்படலாம். மொத்தமாக சொல்லப்போனால் இதில் பாதுகாப்பு குறைவு.

சேமித்த பணத்தை நம் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(Liquidity is the key feature)

பொருளாதார அடிப்படையில் சொல்வதென்றால், முதலீடு என்பது தற்போதய உபயோகத்திற்க்கு அல்லாமல் வளமான எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவது. (No Liquidity)

முதலீட்டில் அவசர தேவையை பூர்த்தி செய்யவது சற்று கடினமே. அவ்வாறு செய்ய நினைத்தால், அது நட்டத்திலும் அமையலாம்.

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/vs-difference-between-savings-and.html"