Showing posts with label காசோலை. Show all posts
Showing posts with label காசோலை. Show all posts

Friday, 21 May 2010

* ATM தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் மரணம்

வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் முறையை மகா எளிமையாக்கியுள்ள ஏடிஎம் மெஷினைக் கண்டுபிடித்தவரான ஜான் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd-Barron) ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

இந்த ஷெப்பர்ட் தான் உலகின் முதலாவது ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் இவர் அங்குள்ள ரைமோர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யும் அலிஸ்டைர் ரின்ட் கூறினார்.

60ம் ஆண்டுகளில் ஒருமுறை தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். ஆனால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்குவேன் என்று அறிவித்தார் ஷெப்பர்ட். சொன்னதோடு நிற்காமல் அந்த இயத்திரத்தையும் கண்டுபிடித்தார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பணம் தரும் ATM இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ATM இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.

ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி பணம் தரும் இயந்திரம், வடக்கு லண்டன் புறநகர்ப் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது ATM இயந்திரமாகும்.

அப்போது பிளாஸ்டிக் டெபிட் கார்ட் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ஷெப்பர்ட் கண்டுபிடித்த மெஷினில், வேதிப் பொருள் தடவப்பட்ட சிறப்பு கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இதை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆறு இலக்கம் கொண்ட அடையாள எண்களை உருவாக்கினார் ஷெப்பர்ட். ஆனால் ஆறு எண்ணாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவித்ததால் அதை நான்கு இலக்க எண்ணாக மாற்றினார் ஷெப்பர்ட்.

சமையலறையில் வைத்து இதுகுறித்து நான் எனது மனைவியுடன் விவாதித்தேன். அப்போது அவர், என்னால் நான்கு இலக்க எண்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றார். இதையடுத்தே நான்கு இலக்க எண்களை நான் உருவாக்கினேன் என்றார் ஷெப்பர்ட்.

தற்போது உலக அளவில் 10.7 லட்சம் ATM இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இதற்குப் பிள்ளையார் சுழி போட்ட ஷெப்பர்ட் தற்போது மரணமடைந்துள்ளார்.

ஷெப்பர்டுக்கு மனைவி, 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/atm.html"

Wednesday, 10 March 2010

* பிரிட்டனில் காசோலைக்கு 2018ல் முற்றுப்புள்ளி

பிரிட்டனில் வரும் 2018ம் ஆண்டு முதல் காசோலை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என இங்கிலாந்து பேமென்ட் கவுன்சில் (PAYMENT COUNCIL) அறிவித்துள்ளது.

பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் மேலும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலும் பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளே பயன்பாட்டில் உள்ளது.



எனினும் பிரச்னைகள் மிகுந்த காசோலை முறையை ஒழிக்க திட்டமிடப்பட்டது. பிரிட்டனின் நிதித் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய பேமென்ட் கவுன்சில் இதற்கான தீர்மானத்தை ஒருமித்தக் கருத்துடன் நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, வரும் 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை தான் காசோலைகளுக்கு மதிப்பு. அதன் பிறகு அவை மதிப்பற்றதாக கருதப்படும். 350 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காசோலை பயன்படுத்தும் முறை அத்துடன் காலாவதியாகி விடும்.

இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும்.

பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு என்றார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/2018.html"