Showing posts with label கூகுள். Show all posts
Showing posts with label கூகுள். Show all posts

Sunday, 14 March 2010

* மைக்ரோசாப்ட் - யாஹூ இணைப்புச் சாதகமான முடிவு (Microsoft-Yahoo Deal)

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட் - யாஹூ இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தை ஒரு வழியாக சாதகமான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டுதான் முதல் முறையாக யாஹூவை வாங்கும் தன் விருப்பம் மற்றும் அதற்கான தொகை குறித்து அறிவித்தது மைக்ரோசாப்ட். ஆனால் அந்த ஆண்டு விஷயம் சாதகமான முடிவுக்கு வராததால், மீண்டும் 2007ம் ஆண்டு இதுகுறித்த பேச்சில் இறங்கியது. 2008ம் ஆண்டு யாஹூவின் பங்குகளுக்கு 47.5 பில்லியன் டொலர் வரை தர முன்வந்தது மைக்ரோசாப்ட்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை யாஹூ. பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2008ம் ஆண்டு மே மாதம் யாஹூவின் பங்குகள் விலை சரிந்து 33 டாலராகிவிட்டது. நேற்று யாஹூ பங்குகள் விலை மேலும் சரிந்து 16.32 டொலராகிவிட்டது.

இவர்களின் இந்த குழப்பமான நிலை கூகுளுக்கு பெரும் சாதகமாக அமைய, அசைக்க முடியாத பலத்துடன் முதலிடத்துக்கு வந்துவிட்டது கூகுள்.

இப்போது கூகுளை மிஞ்ச வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், யாஹூவும் மைக்ரோசாப்டும் மீண்டும் புதிய இணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. இதன்படி 10 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் கைகோர்த்து இயங்கும். அதன் மூலம் யாஹூ தேடியந்திரத்துக்கு கூடுதல் பலம் கிடைப்பதோடு, கூகுளுக்கு சரியான போட்டியாகவும் அமையும்.

இந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதில் தமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அமெரிக்க அரசும் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கூகுள் தேடியந்திரமே 3-ல் 2 பங்கு பயனாளர்களைக் கொண்டுள்ளது.

ஆனால் யாஹூவுக்கு 7.4 சதவீதமும் சீனாவின் பெய்டு தேடியந்திரத்துக்கு 7 சதவீகிதமும், மைக்ரோசாப்டின் பிங் சர்ச் என்ஜினுக்கு வெறும் 3.2 சதவீகிதமும் மட்டுமே பயனாளர்கள் உள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் அதிக பயன் யாஹூவுக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. முதல் 5 ஆண்டுகளுக்கு வரும் விளம்பர வருவாயில் 88 சதவீதம் யாஹூவுக்கே கிடைக்கும். தவிர, இந்த ஒப்பந்தத்துக்காக யாஹூவுக்கு 150 மில்லியன் டொலர்களை தருகிறது மைக்ரோசாப்ட். தவணை முறையில் இந்தத் தொகை தரப்படுமாம்.

தவிர, யாஹூவின் 400 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க பயனாளர்கள் யாஹூ தளத்தில் தேடத் துவங்கினால், அது தானாகவே மைக்ரோசாப்ட் தளத்துக்குப் போகும் அளவு வேலைகள் நடந்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹூ முழுமையாக மைக்ரோசாப்ட் கைக்குப் போய்விடும்.

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/microsoft-yahoo-deal.html"

Friday, 15 January 2010

* கூகுள் சீனாவிலிருந்து வெளியேற்றம்!!!


தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் தொடர்வதால், இனி சீனாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள்.

இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னொரு பக்கம், கூகுளுக்கு நேர்ந்த சங்கடத்தை சர்வதேச வர்த்தக சுதந்திரத்துக்கு நேர்ந்த அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அமெரிக்கா.

இந்த விஷயத்தில் உடனடி விளக்கம் தேவை என சீன அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனே கேட்டுள்ளார்.

என்ன நடந்தது?

சீனாவின் பெரும் சந்தையைக் கலக்க வேண்டும் என்ற நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்குள் கால் வைத்தது கூகுள். ஆனால் அப்போதே கூகுளுக்கு சீனா தனது கட்டுப்பாடுகள், தணிக்கை விதி முறைகளைக் கூறிவிட்டது. இவற்றுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சீனாவில் இணையதளம் இயங்க முடியும் என்று கூறப்பட்டுவிட, அதை முழுமையாக ஒப்புக் கொண்டது கூகுளும்.

ஆனால் உலகம் முழுக்க உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சர்வாதிகாரத்துக்கு எதிரான இயக்கங்கள் கூகுளையே பிளாக் மற்றும் மின்னஞ்சல் சேவைக்குப் பயன்படுத்துகின்றன. கூகுள் சேவை மூலம் இந்த அமைப்புகள், தனக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பப்படுவதாக நம்புகிறது சீனா.

பெயரளவுக்கு மார்க்கெட் பொருளாதாரம் பேசினாலும், தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சி முறை சர்வாதிகாரத்தை நிலை நாட்டி வரும் சீனாவுக்கு இதில் மகா எரிச்சல்.

இந்த நிலையில்தான் கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மற்றும் ப்ளாக்கர் சேவைகளை குறிவைத்துத் தாக்குதல் நடந்தது. ஆராய்ந்ததில் இதன் ஆரம்பமே சீனாதான் என்பது தெரிந்தது.

எனவே இனியும் சீன கட்டுப்பாடுகளுக்கு தலைவணங்குவது சரியாக வராது என்றும், சீனாவிலிருந்து வெளியேருகிறோம் என்றும் அறிவித்துள்ளது கூகுள். கூகுளைப் போன்ற சேவைய வழங்கும் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இந்த சைபர் தொல்லைக்கு ஆளாகியுள்ளதால் அவர்களும் கூகுள் வழியில் வெளியேறக்கூடும் என்பதால், அடுத்த நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறது கூகுள். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_15.html"