பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Friday, 23 July 2010
* அரசாங்க செலவுக் குறைப்பால் பிரித்தானியாவில் குற்றச் செயல்கள் பெருக வாய்ப்பு
,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு துறைகளையும் போலவே காவல்துறைக்கு நிதி அளித்து வரும் உள்துறையிலும் 25 சதவீத செலவீனக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காவல் துறையில் அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம் 12 சதவீத நிதியை சேமிக்க முடியும் என்றும் 25 சதவீத குறைப்பு என்பது மிகவும் அதிகப்படியானதால் காவலர்கள் திறமையுடன் பணியாற்ற முடியாத சூழல்கள் ஏற்படுவதோடு குற்றங்கள் பெருகும் என எச்சரித்துள்ளார் சர் டெனிஸ் ஒ கொன்னோர்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் அரசும் , உள்துறை அமைச்சகமும் இணைந்து காவல்துறையில் செலவை குறைப்பதை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_23.html"
Sunday, 21 March 2010
* சேமிப்பை பற்றிய ஒரு பாடம் (படம்)
விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_21.html"
Saturday, 20 March 2010
* பணம் செய்ய விரும்பு
நாம் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? வேறு எவரிடமும் கை ஏந்தாமல் நமது சொந்த தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்துக்காக செலவிடவும் பணம் தேவை. இவ்வாறு ஒவ்வொருவரும் நல்ல முறையில் பணம் சம்பாதித்து சேமித்து வந்தால் அது அந்த நாட்டையே வளமாக்க உதவும்.
எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி... இப்பொழுது நாம் ஒரு வேலைக்கு செல்கிறோம் அல்லது நாமே சொந்தமாக தொழில் செய்கிறோம். பணம் நமக்கு சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ மாதந்தோறும் வருகிறது. அவரவர் வேலைகளுக்கு தகுந்தவாறு மாதம் ரூ. 50,000 மோ, ரூ. 100,000 மோ, ரூ. 200,000 மோ சம்பாதிக்கலாம். யார் பணக்காரர்?.... ரூ. 100,000 வருமானம் பெறுபவரா?.... மாதம் ரூ. 200,000 வருமானம் பெறுபவர் ரூ. 250,000 செலவு செய்தால், அதேப்போல் ரூ. 50,000 வருமானம் பெறுபவர் ரூ. 25,000 மட்டுமே செலவு செய்தால், இப்பொழுது யார் பணக்காரர்?.
ரூ. 50,000 வருமானம் பெறுபவர், தான் செலவு செய்யும் பணம் போக மீதியை என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதை, அவர் சேமிப்பு என்று எதை நினைக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் பொறுத்தே அமையும். ரூ. 50,000 வருமானம் பெறுபவர் சிறப்பாக திட்டமிட்டு சிறந்த முறையில் சேமித்தால், முதலீடு செய்தால், அவரே மாற்ற இருவரை விட குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம்.
ஆகவே ஒருவர் பணக்காரர் ஆவதை தீர்மானிப்பது ஒருவரது வருமானம் மட்டும் அல்ல, அவரின் செலவிடும் பழக்கமும், அவரின் சேமிக்கும் பழக்கமுமே ஆகும். சரி, இப்போது, பணத்தை எப்படி செலவிடுவது?... எப்படி சேமிப்பது?...
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/03/blog-post.html"
Monday, 8 March 2010
* பவர் ஆப் அக்குமுலேசன் (Power of Accumulation)
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.
பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.
1வது கட்டம் = 1 நெல்மணி
2வது கட்டம் = 2 நெல்மணி
3வது கட்டம் = 4 நெல்மணி
4வது கட்டம் = 16 நெல்மணி
5வது கட்டம் = 256 நெல்மணி
6வது கட்டம் = 65636 நெல்மணி
7வது கட்டம் = 4294967296 நெல்மணி
8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி
9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி
சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.
அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.
சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).
சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work
9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??
சும்மா கணக்கு போட்டு பாருங்க........

சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/power-of-accumulation.html"
Sunday, 27 December 2009
* சேமிப்பு Vs முதலீடு (Difference between savings and Investments)
சேமிப்பு (Savings) | முதலீடு (Investment) |
சேமிப்பு என்பது வருமானத்தின் ஒரு பகுதி. இதன் மூலம் பலனை எதிர்பார்க்காமல், பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வங்கிகளில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது. (Money will be safe) | லாபம் தரும் என்ற நம்பிக்கையில், வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஏதேனும் ஒரு பொருளின் (நிலம், வீடு, தங்கம், பங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்) மீது முதலீடு செய்வதே இன்வஸ்மெண்ட் ஆகும். |
இதில் பாதுகாப்பு நிறைய, லாபம் குறைவு. (More safe, less profit) | முதலீடு உங்களுக்கு லாபகரமாகவும் அமையலாம், அதே சமயம் நட்டமும் ஏற்ப்படலாம். மொத்தமாக சொல்லப்போனால் இதில் பாதுகாப்பு குறைவு. |
சேமித்த பணத்தை நம் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். (Liquidity is the key feature) | பொருளாதார அடிப்படையில் சொல்வதென்றால், முதலீடு என்பது தற்போதய உபயோகத்திற்க்கு அல்லாமல் வளமான எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவது. (No Liquidity) முதலீட்டில் அவசர தேவையை பூர்த்தி செய்யவது சற்று கடினமே. அவ்வாறு செய்ய நினைத்தால், அது நட்டத்திலும் அமையலாம். |
