Monday 25 March 2013

கசினோ சூதாட்ட தொழில் மன்னன் ஜேம்ஸ் பாக்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

கசினோ சூதாட்ட தொழில் மன்னன் என புகழ்பெற்ற உலகின் முதல் நிலை கசினோ சூதாட்ட கூட்டு நிறுவனங்களின் தலைவரான ஜேம்ஸ் பாக்கர் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

கொழும்பு லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு எதிரில் உள்ள  பாரிய வாகன தரிப்பிடத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, மிகப் பெரிய கசினோ சூதாட்ட நிலையம் மற்றும் ஆடம்பர சுற்றுலா விடுதி தொகுதி ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அவர் இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

கிரவுண் கசினோ என்ற அவரது நிறுவனம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் மிகப் பெரிய சூதாட்ட மையங்களை நடத்தி வருகிறது.  இதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த பாக்கர், கசினோ நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து இலங்கையின் முக்கிய நபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன் போது, இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டவில்லை. 

இந்த நிலையில், குறித்த கசினோ சூதாட்ட நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

நன்றி:-உலக தமிழ்ச் செய்திகள்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2013/03/blog-post_25.html"

Tuesday 5 March 2013

* ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு கடனாக பெற அனுமதி

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் 210 இரும்பு பாலங்களை அமைப்பதற்கு தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இதற்கமைவாக இந்த தொகை இலங்கையின் ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தற்போதைய நாணயமாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை ரூபாவின் இந்த கடன் தொகையின் பெறுமதி 1.2 பில்லியன்களாக அமைந்துள்ளது. இந்த கடன் தொகையை மீள் செலுத்தும் காலம், வட்டி வீதம் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

நன்றி:- Tamil Mirror
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2013/03/10.html"