இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.33 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.33 சதவீதம் (20.82 புள்ளி) உயர்ந்து 6,248.08 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.04 சதவீதம் (1.31 புள்ளி) சரிந்து 3,443.25 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,335.04 மில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 31.01.2014
S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 31.01.2014
வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 208.78 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 429.62 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 220.84 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது