கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கைகொடுக்கும் விதத்தில் ஒரு புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன்தொகையான 23.5 பில்லியனில் 14.4 பில்லியன் டாலரை இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள கடன்கொடுத்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
5 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டு தவணைகளில் இந்த கடன் தொகை செலுத்தப்படும்.
மீதியுள்ள 8.9 பில்லியன் டாலர் கடனை, துபாய் அரசே செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம், உடனடியாக இந்த பெரும் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பித்துள்ளது துபாய் வேர்ல்டு.
துபாய் வேர்ல்டு நிறுவனத்தின் கடன் நெருக்கடியால் உலக சந்தையே பெரும் சரிவுக்குள்ளானது நினைவிருக்கலாம்.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post_28.html"
பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts
Friday, 28 May 2010
Tuesday, 13 April 2010
* துபாயில் வாடகை 5 சதவீதம் வீழ்ச்சி

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் துபாயில் வாடகை 5 சதவிகித அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கிளட்டன்ஸ் என்ற துபாய் நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 2008-ம் ஆண்டிலிருந்து துபாய் ரியல் எஸ்டேட் மார்க்கெட் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும், இதன் அளவு 45 சதவிகிதத்தை எட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக மற்றும் குடியிருப்பு வாடகைகளில் 5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிளட்டன் தெரவித்துள்ளது.
அதேபோல, நிலம் மற்றும் கட்டடங்கள் விற்பனையிலும் 2.9 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறதாம். இரண்டாம் காலாண்டில் மேலும் பல புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்பதால் இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/5.html"
லேபிள்கள்
துபாய்
Saturday, 27 March 2010
* கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்கிறது துபாய் வேர்ல்ட்!
சுமார் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன்களை திருப்பிச் செலுத்த எட்டு ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது துபாய் வேர்ல்ட் நிறுவனம்.துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு( நிறுவனம், கடந்தாண்டு திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது.
இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது,ஏராளமானோர் வேலையிழந்தனர்.
பிரிட்டனின் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட், எச்எஸ்பிசி, லாயிட்ஸ் வங்கி குழுமம் உள்ளிட்ட சுமார் 100 வங்கிகளுக்கு 2 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு கடன் செலுத்த வேண்டியிருந்தது.
துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட கெடுவில், ஒரே செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாயின.
துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் ஆலோசனை நடத்தினர்.
துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், இக்கடன் தொகையில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டொலர் தொகையை திருப்பிச் செலுத்த எட்டு ஆண்டு அவகாசம் வழங்குமாறு துபாய் வேர்ல்ட் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இந்த அவகாசம் கிடைத்தால் ஒட்டுமொத்த தொகையையும் முழுமையாக திருப்பிச் செலுத்திவிட முடியும் என துபாய் வேர்ல்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_27.html"
லேபிள்கள்
துபாய்
Sunday, 17 January 2010
* ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகம் துபாய்க்கு மாற்றப்படுமா?
2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து துபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது.ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா அதிகாரிகளை அழைத்துள்ள துபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.
பூகோள அமைப்பில் துபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம், உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழி, விமான வழி, சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.
உலக சமாதானத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஐ.நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் ஐ.நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக ஐ.நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் "யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி" துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்:-
Move The U.N. To Duba- Forbes
Debt-laden Dubai offers to host U.N. headquarters - Reuters submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_16.html"
லேபிள்கள்
அமெரிக்கா,
ஐக்கியநாடுகள்,
துபாய்
Subscribe to:
Posts (Atom)