ஒரு பக்கம் அரசின் 40 சதவீத செலவீனக் குறைப்பு நடவடிக்கை மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான நன்மைகள் ரத்து ஆகியவற்றால் ஆட்டங்கண்டுள்ள பிரித்தானியர்களில் பலர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதற்கொண்டு அதிகப்படியான வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் பிரித்தானியக் குடும்பங்களின் பொருளாதார நிலை மேலதிக பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி என்பதையும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம் எனவும் நிபுணர் தரப்பு எச்சரித்துள்ளது.
தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் 43,875 பவுண்ஸ் வருமானமீட்டுபவர்கள் தான் அதிகப்படியான வரி செலுத்துபவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இந்த வரம்பு அடுத்த வருடம் முதற்கொண்டு 42,475 பவுண்ஸ் என குறைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவர் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/7.html"
பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Showing posts with label வீட்டுக் கடன் நெருக்கடி. Show all posts
Showing posts with label வீட்டுக் கடன் நெருக்கடி. Show all posts
Monday, 6 December 2010
Friday, 16 July 2010
* அமெரிக்காவில் வீடு விற்பனை கடும் சரிவு
இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடுகள், ரியல் எஸ்டேட் விற்பனை மோசமடைந்துள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீதம் (கிட்டத்தட்ட 4.46 லட்சம் வீடுகள்) சரிவாகும். மே மாதத்தில் 3 லட்சம் வீடுகளே விற்பனையாகியுள்ளன.சென்ற ஆண்டு மே மாதத்தில் 3.69 லட்சம் வீடுகள் விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் சரிவு 19 சதவீதம் ஆகும்.
வீடுகள் விற்பனையில் ஏற்படும் சரிவு பொருளாதார தேக்க நிலையை குறிப்பிடும் அம்சம் என்பதால் அமெரிக்கா இன்னும் பொருளாதார மந்த நிலையிலிருந்து முழு அளவில் மீளவில்லை என்பது தெளிவாகிறது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_16.html"
லேபிள்கள்
அமெரிக்கா,
வீட்டுக் கடன் நெருக்கடி
Thursday, 8 July 2010
* நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதிகளைத் திரும்பப் பெற்று 3 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க G 20 நாடுகள் மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது.
பொருளாதாரப் பின்னடைவால் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதியை குறுகிய காலத்தில் திரும்பப்பெற்றால் அது மீண்டும் சிக்கலை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும், நிதி நிலையை மேம்படுத்த பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பது தொடர்பான இந்த உறுதி மொழி ஜி 20 நாடுகள் மாநாட்டின் இறுதி அறிக்கையில் அளிக்கப்படும். மூன்றாண்டுகளில் நிதிப் பற்றாக்குறைத்து அதன் மூலம் கடன் சிக்கலால் ஏற்பட்ட நிதி நிலை சமமின்மையை சீர்படுத்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/g-20.html"

பொருளாதாரம்,
வீட்டுக் கடன் நெருக்கடி
Saturday, 13 March 2010
* வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி?
வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.
The Crisis of Credit Visualized பகுதி-01
The Crisis of Credit Visualized பகுதி-02
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_13.html"
The Crisis of Credit Visualized பகுதி-01
The Crisis of Credit Visualized பகுதி-02
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_13.html"
லேபிள்கள்
வீட்டுக் கடன் நெருக்கடி
Subscribe to:
Posts (Atom)