Monday 6 December 2010

* பிரித்தானியாவில் 7லட்சம் பேர் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம்

ஒரு பக்கம் அரசின் 40 சதவீத செலவீனக் குறைப்பு நடவடிக்கை மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான நன்மைகள் ரத்து ஆகியவற்றால் ஆட்டங்கண்டுள்ள பிரித்தானியர்களில் பலர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதற்கொண்டு அதிகப்படியான வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பிரித்தானியக் குடும்பங்களின் பொருளாதார நிலை மேலதிக பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி என்பதையும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம் எனவும் நிபுணர் தரப்பு எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் 43,875 பவுண்ஸ் வருமானமீட்டுபவர்கள் தான் அதிகப்படியான வரி செலுத்துபவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இந்த வரம்பு அடுத்த வருடம் முதற்கொண்டு 42,475 பவுண்ஸ் என குறைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவர் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/7.html"

1 comment:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஅடுத்த வருடம் முதற்கொண்டு 42,475 பவுண்ஸ் என குறைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவர் எனவும் நிபுணர்கள் ஃஃஃஃ

யாரும் நம்மாளுகளும் மாட்டுவாங்களா..??