Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Wednesday, 3 August 2011

* இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனா முதலிடம்


இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதில் சீனாவிடம் இருந்து மட்டும், 759.8 மில்லியன் ஐ.அ.டொலர் (மொத்த கடனில் 55%) பெறுமதியான கடன் பெற்றுக் கொண்டதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டள்ள நடு ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில் 413.4 மில்லியன் ஐ.அ.டொலரை வழங்கிய (30%) ஐப்பான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர உலக வங்கி ($.105.8m), ஆசிய அபிவிருத்தி வங்கி ($.89.2m), ஐ.நா. நிறுவனங்கள் ($.8.8m) மற்றும் சீனா, இந்தியா ஆகியவற்றில் இருந்து 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது.

குறிப்பாக வீதி, துறைமுகம், மின்சாரம், நீர் வழங்கள் ஆகிய கீழ்கட்டுமான அபிவிருத்திகளுடன் விவசாயம், மீன் பிடி துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களிற்காகவே இந்த புதிய கடன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் நிதி திட்டமிடல் அமைச்சின் நடு ஆண்டு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிணக்கின் காரணமாக மேற்குலக நாடுகள் உதவிகளை குறைத்து வரும் நிலையில், சீனா. ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பங்காளிகளாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/blog-post.html"

Saturday, 23 July 2011

* இலங்கை பொருளாதாரத்தின் நம்பிக்கை உயர்வு

புகழ் பெற்ற சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இரண்டினால் (Moody’s Investors Service Singapore (Pvt) Ltd and Fitch Ratings), இலங்கை பொருளாதாரம் தொடர்பான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அடைவு மட்டமானது, 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தரப்படுத்தல் நிறுவனங்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் தற்போது முதலீடு தொடர்பான அச்சுறுத்தல் குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி வீதம், பணவீக்க வீதம், வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுப் படுகடன் தொடர்பாக திருப்தியளிக்க கூடிய நிலையினை கண்டுள்ளதால் இலங்கைப் பொருளாதாரத்தின் நம்பிக்கை ஒரு படி மேலே உயர்ந்துள்ளது.

2009 ல் 9.9 சதவீதம் (in GDP) எனக் காணப்பட்ட இலங்கையின் வரவு செலவு திட்டப் பற்றாக்குறையினை, 2010 ல் 8 சதவீதமாக குறைக்க முடிந்துள்ளது. இதனை 2011 ல், 6.8 சதவீதமாகவும் 2012 ல், 5.2 சதவீதமாகவும் மேலும் குறைப்பதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல 2009 ல், இரட்டை தசமதானங்களில் காணப்பட்ட பணவீக்க வீதத்தினை கடந்த ஆண்டில் இருந்து ஒற்றை தசமதானமாகவே வைத்திருக்க இலங்கைப் பொருளாதாரத்தினால் முடிந்துள்ளது.

2011 மற்றும் 2012 காலத்தில், 7.5 - 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்ய கூடிய வல்லமையினை இலங்கை தற்போது கொண்டுள்ளது. 2009 மார்சில் 1.3 பில்லியன் ஐ.அ.டொலராக காணப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கினை, 2011 ஏப்ரல் மாதத்தில் 7.2 பில்லியன் ஐ.அ.டொலராக அதிகரிக்க முடிந்துள்ளது.

இதேபோல அரசியல் உறுதி என்ற ஆய்விலும் ஸ்திரம் என்ற அளவில் இருந்து சாதகம் என்ற அளவுக்கு முன்னேறியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இலங்கைப் பொருளாதாரத்தின் நாணயம் அல்லது கடன் மீளளிக்கும் ஆற்றல் 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக உயர்ந்துள்ளது என சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தற்போது காணப்படும் பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில், இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி (8% - 10%) இப்போதைக்கு சாத்தியம் இல்லை என உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் (Global Economic Prospects 2011) சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post.html"

Thursday, 16 June 2011

* இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை - உலக வங்கி


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக (GDP) இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016 ல் முறையே 8.5%, 9.5% மாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது.

எனினும் இது 2011, 2012, 2013 ல் முறையே 7.5%, 6.8%, 6.4% என எட்டு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியினையே இலங்கையால் பதிவு செய்ய முடியும் என உலகவங்கி கடந்த வாரம் வெளியிட்ட (Global Economic Prospects 2011) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உயர்வான பணவீக்கம், உயர்வான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்தளவான பொதுப் படுகடன்கள் போன்றவை தனியார் முதலீடுகளை வெளியேற்றுகின்றன. இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான வளர்ச்சி வீதம் சரிவடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பணவீக்கம் உயர்வாக உள்ளன. ஆனால் இவை வட்டி வீதங்களை உயர்த்தி பணவீக்க அழுத்தங்களை சமாளிக்கின்றன. எனினும் இத்தகைய தீர்மானத்தினை இலங்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இலங்கைப் பொருளாதாரம் பணவீக்க அழுத்தங்களிற்குள்ளேயே காணப்படுகின்றது.

இதன் விளைவாகவும் வரவு செலவுதிட்ட பற்றாக் குறைகள் உயர்வடைவதுடன் இதுவே கடந்த ஆண்டில் மாலைதீவு, இந்தியா, இலங்கை ஆகியவற்றில் முறையே 20.7%, 8.8%, 7.9% என ஒப்பீட்டளவில் இலங்கையில் குறைவாக காணப்பட்டாலும் வருந்தத்தக்க நிலையிலேயே இலங்கையும் உள்ளது என உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவினை தளமாக கொண்டியங்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கம், செயற்பாடு மற்றும் அறிக்கைகள் தொடர்பாக ஆசிய நாடுகள் அதிருப்தி அடைந்து இருப்பதோடு இவற்றுக்கு எதிராக பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/06/blog-post.html"

Tuesday, 15 March 2011

* ரூ.121.3 பில்லியன் வருமானத்தை EPF ஈட்டித் தந்துள்ளது

கடந்த ஆண்டில் ரூ.121.3 பில்லியன் வருமானத்தை ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டித் தந்துள்ளது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.6% வளர்ச்சி என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மொத்தமாக ரூ.900 பில்லியனை கடந்த ஆண்டில் ஊழியர் சேமலாப நிதியம் கொண்டிருந்தது. இதில் 94% க்கும் மேலான அளவு நிதியினை அரச பிணைகளில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக கடந்த ஆண்டில் வட்டியாகவும் இலாபமாகவும் ரூ.118 பில்லியன் வருமானத்தைப் பெற முடிந்துள்ளது.

இதேவேளை ரூ.32 பில்லியன் நிதியினை பங்கு வானிபத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இதன் தொகை அதிகமாக உள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் Dr.எஸ்.சந்திரசேகரம் ஒன்லைன் உதயனுக்கு கருத்து தெரிவிக்கையில், பங்கு சந்தையில் இவ்வாறு அரசு முதலீடு செய்வதனை இரண்டு விதமாக நோக்கலாம்.

அரச நிதி வளத்தினை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பங்குச் சந்தையிலான வளர்ச்சியினையும் அடைய முடியும். எனினும் அரசின் பங்குச் சந்தையிலான பாரிய முதலீடானது பங்கு வானிபத்தில் ஒர் போலியான வளர்ச்சியை தோற்றுவிக்கின்றது. இதனை நம்பி முதலீடு செய்யும் தனியார் துறையினர் இலாபத்தை மட்டுமன்றி ஆபத்தினையும் சந்திக்க நேரிடுகின்றது.

குறிப்பாக பங்கு வானிபம் சிறப்பாக உள்ள காலத்தில் அரசு தான் வைத்திருக்கும் பங்குகளை விற்று வருமானத்தை உயர்த்த முனையும் போது இந்த அதிர்ச்சியினை தனியார் துறையால் ஈடு செய்ய முடியாத நிலையில் பங்குதாரர்கள் நஷ்ரம் அடைகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது வைப்புகளிற்கான வட்டி வீதங்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள வைப்புக்களிற்கு 12.5% வட்டி வழங்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/03/1213-epf.html"

Monday, 14 February 2011

* மின் உற்பத்தியில் வடபகுதியும் முன்னேற்றம்

2012 முடிவதற்குள் இலங்கை முழுவதும் மின் ஒளி பெறவேண்டும் என மகிந்த சிந்தணை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய மின்சார உற்பத்தியில் வடபகுதியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு இறுதி நிலவரப்படி மின் வழங்களில் கிளிநொச்சி 10%, முல்லைத்தீவு 16%, மன்னார் 44%, வவுணியா 68%, யாழ்ப்பாணம் 72% என்றளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் 100% மின் வழங்களை பெற்ற மாவட்டங்களாக கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை ஆகிய
மாவட்டங்கள் காணப்படுகின்றன. அத்துடன் 90% க்கு மேலான அளவில் மின் வழங்களை பெற்ற பிரதேசங்களாக களுத்துறை, மாத்தறை, காளி, கண்டி ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன என அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_14.html"

Thursday, 10 February 2011

* வேலைதேடி வெளிநாடு செல்வோர் வயதெல்லை அதிகரிப்பு

வேலைதேடி வெளிநாடு செல்லும் இலங்கையரின் வயதெல்லை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்லும் இளம் பெண் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வயதெல்லை அதிரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையரில் 50 வீதமானவர்கள் பெண்கள். அத்துடன் 2010 யூன் வரை 134,670 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றனர். இவர்களில் 59,377 பேர் பெண்கள் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பெண்களை வேலைக்கெடுக்கும் பெரும்பாலான வெளிநாடுகள் இவர்களிற்கான குறைந்த வயதெல்லை கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை. அதேவேளை வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு இழைக்கப்படும் பல்வேறு வகையான சுறண்டல்களில் இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_10.html"

Wednesday, 9 February 2011

* எரிபொருள் விலை அதிரிக்க வேண்டும்: லங்கா ஐ.ஓ.சி அரசிடம் கோரிக்கை

ஒரு லீற்ரர் பெற்ரோலின் விலை 9 ரூபாவாலும், ஒரு லீற்ரர் டீசலின் விலை 21 ரூபாவாலும் அதிகரிக்க அரசிடம் கோரியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி யின் இயக்குனர் சுரேஸ் குமார் தெரிவித்துள்ளதாக லங்கா பிஸ்னஸ் இனையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருட்களிற்கான விலை அதிகரித்துள்ளது.இதற்கமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலையதிரிப்பினை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசு ஒரு லீற்ரர் பெற்ரோலுக்கான தீர்வையினை 10 ரூபாவால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இதுவரை ஒரு லீற்ரர் பெற்ரோலிற்கு 15 ரூபா தீர்வை விதிக்கப்பட்டு வந்ததுடன் தற்போது 5 ரூபாவாக தீர்வை அமைவதால் பெற்ரோல் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஒரு லீற்ரர் பெற்ரோல் 115 ரூபாவிற்கு விற்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_09.html"

Tuesday, 8 February 2011

* இலங்கையின் ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 2010 நவம்பரில் 834 மில்லியன் ஐ.அ.டொலரால் அதிகரித்துள்ளது. இது 2009 நவம்பருடன் ஒப்பிடுகையில் 36 வீத வளர்ச்சி என்பதுடன் 2004 ஒக்டோபருக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆகக் கூடிய தொகை என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.


ஏற்றுமதி வருமானத்தில் கைத்தொழில் ஏற்றுமதிகள் (76வீதம்) பிரதான இடத்தினை வகிக்கின்றது. இதற்கு புடவை மற்றும் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதாகும். இதேவேளை 2010ன் முதல் 11 மாதங்களில் மொத்தமாக ஏற்றுமதி வருமானம் 7,339 மில்லியன் ஐ.அ.டொலராக காணப்படுவதுடன், இது 2009ம் ஆண்டை விட 15.4 வீதம் அதிகமாகும்.

எனினும் 2009 உடன் ஒப்பிடுகையில் 32.6 வீதம் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளது. அதாவது 2010ன் முதல் 11 மாதங்களில் இறக்குமதிச் செலவுகளின் அளவு 12,083 மில்லியன் ஐ.அ.டொலர் என பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_5234.html"

Saturday, 5 February 2011

* இலங்கையின் பணவீக்கம் இவ்வாண்டு உயரும்

இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும். எனினும் பணவீக்கம் 8 வீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு துறை, அன்னியச் செலாவணி ஒதுக்கு மற்றும் நாணயமாற்று வீதம் நிலையான தன்மையைப் பெற்று வருகின்றது. இப்போதுதான் இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது என ஐ.எம்.எவ் ன் இலங்கைக்கான தூதுவர் கொசி மாதே தெரிவித்துள்ளார்.

கடனளிப்புக்காக இலங்கைப் பொருளாதாரம் 5வது தடவையாக ஐ.எம்.எப் ஆல் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவுகளை சமர்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையின் பொருளாதார போக்கு திருப்தியளிப்பதாக உள்ளது. எனினும் இவ்வாண்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கு சர்வதேச உணவு விலையேற்றம், உள்நாட்டு வெள்ள அழிவுகள் பணவீக்க உயர்வை ஊக்குவிக்கும். எனினும் வெளிநாட்டு பாதிப்புக்கள் மற்றும் உள்நாட்டு மெய்சொத்து சந்தை தொடர்பாக மத்திய வங்கி சிறப்பான கண்கானிப்பினை மேற்கொண்டு வருகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச வருமானம் மிகக் குறைவாக உள்ளது. அத்துடன் வரி மற்றும் முதலீட்டு சீர் திருத்தங்கள் சிறப்பாக உள்ளன. நிதித் துறையும் இப்போது வளர்ச்சிக்கு உதவக் கூடிய நிலையினை அடைந்துள்ளது. இன்னும் 4 - 5 வருடங்களில் தற்போதுள்ள 80% எனும் வரவுசெலவு பற்றாக்குறை நிலையை 60% மாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேரினப் பொருளாதாரம் சிறப்பாக நகருகின்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு 6.5% பணவீக்கம் அமையும் என ஐ.எம்.எப் எதிர்வு கூறியது. ஆனால் 5.9% என குறைவாக பதிவு செய்தது. அத்துடன் ஐ.எம்.எப்பின் நோக்கம் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருப்பதாக பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நன்றி:-உதயன் இணையம்

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_05.html"

Thursday, 16 December 2010

* இலங்கையில் இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தம்! ஐயாயிரம் ரூபா நோட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஐயாயிரம் ரூபா நோட்டுகள் அச்சிடப்படவுள்ளன. அதேநேரம் தற்போது புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை அச்சிடுவது நிறுத்தப்படவுள்ளன. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் நாளாந்தம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்திற்கொண்டு குறைந்த பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய பணத்தை காவி செல்வது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற காரணத்துக்காகவே ஐயாயிரம் ரூபா அச்சிடப்பட்டு, இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் வைர விழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

1950.08.28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி 2010.08.28 ஆம் திகதியன்று 60 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தமையைக் குறிக்கும் வகையிலேயே இந்த நாணயக் குற்றி வெளியிடப்படுகின்றது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதான காரியாலயத்திலும் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அதன் கிளை அலுவலகங்களிலும் இந்த நாணயக் குற்றியைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவிததுள்ளது.

நன்றி :-தமிழ்வின் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/blog-post_16.html"

Wednesday, 15 December 2010

* இலங்கையில் 5ஆயிரம் ரூபா நாணயக்குற்றி அறிமுகம்













இலங்கை மத்திய வங்கியின் வைரவிழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் உன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:- வீரகேசரி இணையம் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/5.html"

Tuesday, 10 August 2010

* யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் மேலும் ஒரு கிளை

இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கான இந்தியாவின் உதவிகள் இவ்வங்கிக் கிளை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே கொழும்பில் கிளையை கொண்டுள்ள இந்தியன் வங்கியின் கிளைகளை அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய இடங்களிலும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஸின் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிளை தொடங்கப்பட்ட பிறகு கண்டியில் மேலும் ஒரு கிளை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல இந்தோனேசியாவில் மேலும் ஒரு பிரதிநிதி அலுவலகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதகாவும் அவர் தெரிவித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_10.html"

Thursday, 3 June 2010

* இலங்கையின் இறக்குமதி வரியின் விபரங்கள்

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


(படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_03.html"

Wednesday, 2 June 2010

* இலங்கையில் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுங்கவரி, 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களுக்கு துறைமுக வரி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் வரி ஆகியவை மட்டுமே விதிக்கப்படும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் மேலதிக வரி ஆகியவை இந்த பொருட் களுக்கு விதிக்கப்படமாட்டா.

உள்ளூர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திரிபு வரி குறைக்கப்பட்டுள்ளது. முறையற்ற இறக்குமதி போட்டித் தன்மையில் இருந்து பாதுகாப்பு தேவைகளை உள்ளூர் நடவடிக்கைகளை குறிப்பிட்ட இறக்குமதி பாதித்தால் மட்டுமே இந்த வரி தொடர்ந்து செலுத்த ப்பட வேண்டியிருக்கும். மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் இறக்குமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவற்றின் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட் குவிப்புக்கு எதிரான சட்டம், லேபல் இடுதல் தொடர்பான சட்டம், தரமான பொருட்களை இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் சூழல் மாசடைவதை குறைப்பதற்கும் உள் ளூரில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கமானது இலகுவான வரிக் கட்டமைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி நிலையில் விசேட பொருட்கள் வரிக்கு மட்டுமே உரித்தாகும். இது சிறிய வர்த்தகர்களுக்கான நிர்வாக நடைமுறைகளை பெரிதும் குறைக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/50.html"

Friday, 9 April 2010

* இந்திய வங்கியின் கிளை மீண்டும் யாழ்ப்பாணத்தில்?

யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் கிளையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வங்கியின் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான டி.எம். பாஸின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இந்திய வங்கியின் கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post.html"

Wednesday, 24 March 2010

* புத்தளத்தில் காற்றாலை மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு


புத்தளம் மாம்புரியில்(Mampuri areas of Kalpitya ) காற்றாலை மின்உற்பத்தி நிலையத்தை செனக் தனியார் நிறுவனம்(Senok Wind Power (Pvt) Ltd) நிறுவியுள்ளது.

10 மெகா வோர்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது 5 காற்றாலை மின்விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்தமாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின்விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_24.html"

Tuesday, 23 March 2010

* இலங்கையின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மே மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது


வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் மே மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.


புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் விரைவில் வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைக்க உள்ளது.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_23.html"

Saturday, 6 March 2010

* இலங்கையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: துண்டு விழும் தொகை 41474 கோடி ரூபா

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 41474 கோடி ரூபா என நிதி அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது.


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கும் அரசாங்கம், வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதீட்டு துண்டு விழும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 7.5 வீதத்திற்கு குறைவாக அமையும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2010ம் ஆண்டுக்கான அரச வருமானம் 84781 கோடி ரூபா எனவும், அரச செலவு 126555 கோடி ரூபா எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையினை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்க உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-தமிழ்வின் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/41474.html"

Wednesday, 17 February 2010

* இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. ( GSP+ ) வரிச்சலுகை ரத்து

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. ( GSP+ ) வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவல் பிரஸல்ஸில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஆறுமாத காலப் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜி.எஸ்.பி. ( GSP+ ) திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.


தற்போது ஜி.எஸ்.பி. ( GSP+ ) நிறுத்தப்படுவதானது இலங்கையின் புடவைக் கைத்தொழில் துறையை பாரியளவில் பாதிக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை அமுலுக்கு வருகிறது.


submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/gsp_17.html"

Tuesday, 16 February 2010

* யாழ்ப்பாணத்தில் எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கிக்கிளை திறப்பு

எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கி யாழ்ப்பாணத்தில் தனது புதிய கிளையை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள 145 ஆம் இலக்கக் கட்டடத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைய்த்தது. இந்த வங்கிக் கிளையை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் திறந்து வைக்கிறார். இதில் பிரிட்டிஷ் தூதர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக்கலஸ் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

யாழ் குடாநாட்டில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாலும், அபிவிருத்தி நடைபெற்று வருவதாலும் பல தனியார், அரச வங்கிக் கிளைகள் கூட புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. இன்று முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது.






படங்கள் உதவி:-வீரகேசரி இணையம் submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/hsbc.html"