Showing posts with label டொயொட்டோ. Show all posts
Showing posts with label டொயொட்டோ. Show all posts

Thursday, 8 April 2010

* டொயோட்டாவுக்கு 16.4 மில்லியன் அபராதம்

பாதுகாப்பு குறைபாடுகளுக்காக டொயோட்டா மோட்டார் நிறுவனத்துக்கு 16.4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, தனது கார்களில் பெரும் பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரிந்தும் அதை வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளதாக அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

அதற்கேற்ப, தான் உற்பத்தி செய்து விற்ற 23 லட்சம் கார்களை சமீபத்தில் திரும்பப் பெறுவதாக அறிவித்தது டொயோட்டா. மேலும் இந்தக் கார்களில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டது.

இதைத் தொடர்ந்து குறைபாடுள்ள கார்களை விற்பனை செய்ததற்காக டொயோட்டா நிறுவனத்துக்கு 16.4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலகில் ஒரு கார் உற்பத்தி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராதம் இதுவே. இதற்கு முன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 1 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/164.html"

Sunday, 28 March 2010

* Clerk வேலைக்கு எஞ்ஜினியர் கேட்கும் டொயோட்டா!


டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 1376 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது.

ஆனால் முழுக்க முழுக்க தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களே வேண்டும் என அறிவித்துள்ளது.

1994-ம் ஆண்டு பெரும் சரிவுக்குப் பிறகு மீண்டு வந்த டொயோட்டா, படிப்படியாக மீண்டும் பணியாளர்களை நியமித்து பழைய பலத்துக்குத் திரும்பியது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக்கு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

கடந்த ஆண்டு நஷ்டத்தைச் சந்தித்த இந்த நிறுவனம், இந்த நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் லாபம் காட்டக் கூடும் என்று தெரிகிறது.

எனவே மீண்டும் புதிய பணியாளர் தேர்வைத் துவங்கியுள்ளது. ஆனால் சாதாரண நிர்வாகப் பிரிவு பணிக்கும் பொறியியல் படிப்பு முடித்தவர்களே வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்துள்ளது இந்த நிறுவனம்.

2010 நிதியாண்டில் 460 நிர்வாக ஊழியர்களும் (எஞ்ஜினியரிங்), டொயோட்டா பயிற்சி மையத்துக்கு 240 பயிற்றுநர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இனி நிர்வாகப் பணிகளுக்கும் பொறியியல் படித்தவர்களே வேண்டும் என பிற நிறுவனங்களும் கேட்க ஆரம்பித்தால், கலைப்பிரிவில் பயின்ற மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஜப்பானின் முன்னணி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/clerk.html"

Saturday, 6 February 2010

* டொயொட்டோ கம்பெனிக்கு மேலும் ஒரு பின்னடைவு

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களில் பிரச்சினைகள் இருந்ததால் எண்பது லட்சம் வாகனங்களை திரும்பபெற எடுத்த முடிவுக்கு பிறகு, அதற்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்று இயற்கை வாயு ஆகியவற்றின் கலப்பில் ஓடும் டொயொட்டோவின் புதிய அறிமுகமாக பிரியஸ் (Toyota Prius) எனும் மாடல் கார்களின் பிரேக்குகளில் பிரச்சினை இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த வகையான காரின் பிரேக் செயற்பாட்டின் வடிவமைப்பை தாங்கள் மாற்றியமைத்துள்ளதாகக் கூறும் டொயொட்டோ, ஏற்கனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை எப்படி சரி செய்வது என்பது தொடர்பிலான நடவடிக்கைகளும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வாகனங்களை திரும்பப் பெற நேர்ந்தது அந்த நிறுவனத்துக்கு இரண்டு பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி பார்த்தாலும் டொயொட்டோவிற்கு நிலைமை இப்பொழுது அதை விட பல் மடங்கு மோசமாக உள்ளது. மக்கள் இது தான் வாய்ப்பு என்று நஷ்டயீடு வழக்குகள் போட ஆரம்பித்துவிட்டார்கள். டொயொட்டோவிற்கு முடிவு நெருங்கிவிட்டதா? அல்லது ஒரு பாஸிங் கிளவ்டா?பங்கு சந்தையில் அந்தர் பல்டி அடித்த டொயொட்டோ பங்குகள் வாங்க பலருக்கு வாய்ப்பா? காலம் தான் பதில் சொல்லும்.

தொடர்புள்ள சுட்டிகள் :-

டொயொட்டோ கலங்கம்

டொயொட்டோ மன்னிப்பு கோருகிறது submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/blog-post_06.html"