Showing posts with label ஆப்பிள். Show all posts
Showing posts with label ஆப்பிள். Show all posts

Thursday, 25 August 2011

*''சிலிக்கான் கிங்'' பதவி விலகல்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/blog-post_25.html"

Tuesday, 15 June 2010

* புதிய ஐபோன்-4G ஜூன் 24 முதல் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது.

ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/4g-24.html"

Tuesday, 8 June 2010

* 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட் விற்பனை

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் விற்பனைக்கு வந்து 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள். ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod),ஐபோன் (i Phone) முதல் 2 மாதங்களில் முறையே 125,000,820,000 விற்பனை ஆனது என்கிறார் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 8.13 மில்லியன் ஐபேட்கள் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபேட்களுக்கு கிடைத்துள்ள பிரவேற்பைத் தொடர்ந்து டெல், சோனி, ஹெச்பி போன்ற நிறுவனங்களும் ஐபேட் போன்ற டேப்லட் பிசிக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/2-2.html"

Wednesday, 5 May 2010

* 1 மில்லியன் ஐபேட்( i Pad) விற்று ஆப்பிள் சாதனை!

1 மில்லியன் ஐபேட்களை (கையடக்க கம்ப்யூட்டர்) விற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

28 நாட்களி்ல் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை இது.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod) கருவி இந்த விற்பனை அளவை எட்ட 74 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு கால அளவுக்குள் 1 மில்லியன் ஐபேட்களை விற்றுள்ளது ஆப்பிள் என்கிறார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அரை அங்குல தடிமன் மற்றும் 1.5 பவுண்ட் எடை மட்டுமே கொண்ட ஐபேட்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கம்ப்யூட்டருக்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் 12 மில்லியன் அளவுக்கு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் இ புத்தகங்கள் ( E-Books)விற்பனையாகியுள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/1-i-pad.html"

Tuesday, 4 May 2010

* வர்த்தக உலா பகுதியில் என் கட்டுரை

இந்த வார வீரகேசரியில்(02-05-2010) வர்த்தக உலா பகுதியில் என் கட்டுரை பிரசுரமாகியுள்ளது!

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய Apple

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்

என் தளத்தில் :-மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post.html"

Friday, 30 April 2010

* மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!

அன்றைக்கு மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகள் எதுவும் வேலைக்காகவில்லை. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது.. ஆப்பிளின் பரம எதிரி எனப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்!.

கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு பணியை பில்கேட்ஸ் செய்தார். வாக்குரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமலிருந்ததுதான்!). அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை.


13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலைமை அப்படியே தலைகீழ்... ஐபோன், ஐபாட், ஐபேட் என ஆப்பிள் தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை. சந்தை மூலதன மதிப்பில் இன்று மைக்ரோசாப்டை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் தலைமையிலான ஆப்பிள்!

இன்றைய நிலவரப்படி ஆப்பிளின் சந்தை மதிப்பு 241.5 பில்லியன். மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 239.5 பில்லியன் டாலர்!

அமெரிக்க நிறுவனங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது ஆப்பிளுக்கு. அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள மைக்ரோசாப்ட்.


நிச்சயம் தனது நிறுவனத்துக்கு இப்படியொரு நிலை வரும் என்று பில்கேட்ஸ் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்கிறது அமெரிக்காவின் பிரபல பத்திரிகை. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பார்களே... அப்படி ஒரு நிலை பில்கேட்ஸுக்கு. காரணம், ஆப்பிளில் முதலீடு செய்யுமாறு கூவிக் கூவி அழைத்தும் ஒரு டாலர் தரக்கூட ஒருவரும் முன்வரவில்லை அன்றைக்கு!

அன்று ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு பில்கேட்ஸ் தேவைப்பட்டார். இன்று சரிவிலிருந்து நிமிர பில்கேட்ஸுக்கு ஒரு ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer) (மைக்ரோசாப்ட்டின் இன்றைய CEO) மட்டும் போதாது, ஸ்டீவ் ஜாப்ஸ்களும் தேவை என்று கமெண்ட் அடித்துள்ளது அந்தப் பத்திரிகை.(Jobs then needed Bill Gates far more than Gates needed Jobs. )

Source:-

Apple now bigger than Microsoft in m-cap-Times of india

Apple tops Microsoft on S&P 500, index's guardian says submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_30.html"

Thursday, 15 April 2010

* ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்( iPad) விற்பனை!

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

மேலும், இந்த கம்ப்யூட்டருக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதிலும் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.

ஒரு மில்லியன் ஐபேட் அப்ளிகேஷன் சாப்ட்வேர் மற்றும் 2,50,000 எலக்ட்ரானிக் புத்தகங்கள் தரவிறக்கம் செய்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.

ஜூன் மாதத்துக்குள் 8.5 லட்சம் ஐபேட்கள் விற்க வேண்டும் என்பது ஆப்பிள் நிறுவன இலக்கு. ஆனால் இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள்.

ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது ஐபேட் எனப்படும் கையடக்க கம்ப்யூட்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற கம்ப்யூட்டரை வடிவமைத்து தோல்வி கண்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/3-ipad.html"

Saturday, 30 January 2010

* சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் !


ஆப்பிள் கொம்பியூற்றரை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) !

ஆப்பிள் கொம்பியூற்றரைக் உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்சின் வாழ்க்கை ஒவ்வொரு மனிதரும் அறிந்திருக்க வேண்டிய கதையாகும். நம்பியவர்கள் ஏமாற்றுவதும், நயவஞ்சகர்கள் கூடிச் சதி செய்வதுமான உலகில் எதற்கும் கலங்காது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இந்தத் தொழில் மேதையின் வாழ்வு, ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியமானதாகும்.

பரம ஏழையாகப் பிறந்த இவரை வளர்க்க முடியாத நிலையில் தாய் இன்னொருவருக்கு தத்துக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்தத் தாய் பணத்தைக் கேட்கவில்லை, தன்னுடைய மகனை பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்து பட்டமும் பெற யார் உதவுவார்களோ அவர்களுக்கே தனது பிள்ளையை தத்தாக தருவேன் என்று தெரிவித்தார்.

அதற்கு உடன்பட்டு அவரை தத்தெடுத்த வளர்ப்புப் பெற்றோரும் பல்கலைக்கழகம் வரை அவரை படிப்பிக்க வைத்தார்கள். அதற்கு அப்பால் அவர்களால் முடியாமல் போனது. அதை அறிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தானாக படிப்பை நிறுத்தினார். பட்டினியை தீர்க்க தினமும் ஏழு மைல் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஹரே கிருஷ்ணா மடத்தில் ஒரு வேளை உணவு சாப்பிட்டு தனது பசியைப் போக்கினார். நண்பர்களின் அறையில் தங்கி வெற்றுப் போத்தல்களை பொறுக்கி விற்று, படிப்பைத் தொடர்ந்தார். நீ வாழும் ஒவ்வொரு நாளையும் இன்றுதான் உனது வாழ்வின் கடைசிநாள் என்று நினைத்து வாழ் என்று எண்ணி வாழ்ந்தார். இதுதான் அவர் வாழ்வின் ஆதாரசுருதியாகும்.

பாதி நாட்கள் பட்டினி கிடந்தாலும் கூட, அவர் மனதில் எரிந்த அக்கினி ஓய்ந்துவிடவில்லை. கலிகிராபி என்ற கணினி எழுத்து வடிமைப்பை கண்டு பிடிக்க அல்லும் பகலும் போராடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களாக போராடி மக்கின்ரொஸ் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். இவருடைய முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் பின்னாளில் வந்த மக்கிரோ சொப்ரின் விண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டு பிடிப்பு கைக்கு எட்டியதும் தனது 20 வது வயதில் நண்பரான லாஸ் என்பவருடன் இணைந்து சிறிய பட்டறையாக ஆரம்பித்த ஆப்பிள் கணினித் தொழிற்சாலை 10 வருடங்களில் நாலாயிரம் தொழிலாளரைக் கொண்ட இரண்டு மில்லியான் டாலர் பெறுமதியான பாரிய தொழிற்சாலையாக உருப்பெற்றது.

நிறுவனம் வளர வளர அவருக்கும் அவரது நண்பருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கடைசியில் நிர்வாகத்தில் இருந்த சுயநலவாதிகளை எல்லாம் வளைத்துப் போட்ட நண்பர், ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தூக்கி வீசினார். பாம்புக்கு பால் வார்த்ததற்கான பரிசு ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்குக் கிடைத்தது.

தனது 20 வது வயதில் ஆரம்பித்த நிறுவனம் 30 வது வயதில் பறிபோக மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்தார். மற்றவர்களாக இருந்தால் அடியோடு உடைந்தே போயிருப்பார்கள். இரவு பகலாக பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்தை கைப்பற்றிய நயவஞ்சக நண்பர்களையும், அவர்களுடைய இழி செயலையும் அவர் நினைத்து கவலைப்படவில்லை.


புதிய வேகத்துடன் யாருமே உருவாக்காத நெக்ஸ்ற் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார். இது சாதாரண நிறுவனமல்ல, இன்று நாம் பார்க்கும் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க இதுவே அடிப்படையாக அமைந்தது. புதிய கண்டு பிடிப்பால் ஆப்பிள் நிறுவனத்தை விட உயர்ந்த நிலைக்கு சென்ற அவருடைய நெக்ஸ்ற் நிறுவனத்தை கடைசியில் ஆப்பிள் நிறுவனமே வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆரம்பித்த நிறுவனத்திற்கு மறுபடியும் வெற்றியாளராக திரும்பினார். அடுத்தடுத்து ஆப்பிள் கணினிகளின் உற்பத்தியில் அபார சாதனைகளை படைத்தார்.

பின்நாளில் தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அது கசப்பான நிகழ்வாக இருந்தாலும் அனிமேஷனை உருவாக்கும் இடத்திற்கு தான் வளர அதுவே உதவியது என்று கூறி அமைதி கண்டார்.

இதற்குப் பிறகு அவருக்கு கணையத்தில் புற்று நோய் வந்தது. வாழும் ஒவ்வொரு நாளும் கடைசிநாளே என்று வாழ்ந்த அவர் மனவுறுதி தளர்ந்துவிடவில்லை, புற்று நோய்க்கும் பயந்துவிடவில்லை, தொடர்ந்து, உழைத்தார்.

அவரின் மன உறுதிக்கு முன்னால் நிற்க முடியாது புற்று நோயும் மண்டியிட்டு ஓடியது. ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரைப் பிடித்த புற்று நோயும் விலகிப் போனது. மீண்டும் யாரும் நம்ப முடியாதபடி எழுந்து நின்றார். தன்னை நெருங்கிய எல்லாச் சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்வில் அரிய சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினார்.

- இனியவர்களே உங்கள் வாழ்க்கை குறுகியது, அதை நினைனவிற் கொள்ளுங்கள் வீணாக்காதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. எனவே நீங்கள் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையை சிந்தித்தும் வீணாக்கிவிடாதீர்கள். பிறர் கருத்துக்களின் பேராசையில் உங்கள் உள்ளத்து உணர்வுகள் கூறும் வார்த்தைகளை கவனமாகக் கேட்க மறந்துவிடாதீர்கள். உங்கள் இதயமும், உள்ளுணர்வும் கூறுகிறபடி கேட்டு வாழுங்கள். சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் ! – என்றார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் சொற்பொழிவு- Stay Hungry. Stay Foolish.



பொதுவாக அறிவுரை பலரிடமிருந்தும் கிடைக்கலாம். ஆனால் சாதித்தவர்களின் அறிவுரைகள் விலைமதிப்பற்றவையாகும். அவற்றைப் பின்பற்றினால் அடைய முடியாத சிகரங்கள் இல்லவே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய அற்புத மனிதர்.


ஆண்டு சம்பளம் 1 டொலர் பெறும் நிறுவனத்தின் தலைவர்.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_10.html"

Wednesday, 13 January 2010

* ஸ்டீவ் ஜாப்ஸின் சொற்பொழிவு- Stay Hungry. Stay Foolish.

கண்டிப்பாக கேட்க வேண்டிய பதிவு.



இந்த சொற்பொழிவின் எழுத்து வடிவம் (ஆங்கிலம்) submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/httpnews-service.html"

Sunday, 10 January 2010

* ஆண்டு சம்பளம் 1 டொலர் பெறும் நிறுவனத்தின் தலைவர்

ஆப்பிள்(Apple Inc) நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs), 2009-ல் தனது ஆண்டு சம்பளமாக $1 டொலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.அதேபோல 2009-ம் ஆண்டு பல வருடாந்த போனஸ் உள்ளிட்ட சலுகைகளையும் அவர் பெறவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் நிறுவியவர் ஜாப்ஸ். இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டொலர் மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.

ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டொலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் டாப் CEO என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ம் ஆண்டு தனது பயணப்படியாக 4,000 டொலரை மட்டுமே பெற்றுள்ளார்.இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 871,000 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டொலர்கள்.

ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

நம் நாட்டில் இப்படி ஒருவரை காணமுடியுமா??????? submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/1.html"