Saturday 14 November 2009

* கேளுங்கள்… கட்டாயம் கொடுக்கப்படும்

நீங்கள் எப்போதாவது பேரம் பேசி பொருள்களின் விலையை குறைத்திருக்கிறீர்களா? அது ஒரு தனி திறமை, சிலருக்கு அது கை வந்த கலை. முன்பெல்லாம் அடிக்கடி பேரம் பேசுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது.

எல்லா நாடுகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பல வந்து விட்டதால், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடுவதால் முன்பை போல பேரம் பேசுவதற்கு அவ்வளவு வழியில்லை. இருந்தாலும், பேரம் பேசி விலைகளை குறைப்பதற்கு சில வழிகள் உள்ளன.


விடுமுறைக்காக ஹோட்டல்களில் தங்கும் போது 10%லிருந்து 25% வரை தள்ளுபடி செய்வதற்கு பெரும்பாலான ஹோட்டல்களின் கிளர்க்குகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மேனேஜரை பார்த்து பேச வேண்டும் என்ற அவசியமில்லை. விளம்பரம் செய்யப்பட்ட கட்டணத்திலிருந்து குறைந்தது 10% தள்ளுபடி வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள், கொடுக்கப்படும்.



சூப்பர் மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்யும்போது “என்னிடம் HSBC கார்டு இருக்கிறது, அதற்கு 10% தள்ளுபடி கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன்” என்று எடுத்து விடுங்கள். HSBC போன்ற கார்டுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், அப்படியே பேச்சுவாக்கில் குறைந்தது 10% தள்ளுபடி கேளுங்கள். இப்படி பேசினால் விலையை குறைக்கலாம் என்று அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் போன் கம்பெனி பில் கட்டணத்தை குறைப்பதற்கு ஒரு வழி: அவர்களை கூப்பிட்டு வேறு கம்பெனிக்கு மாறுவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக கூறுங்கள், பெரும்பாலான நேரங்களில் அலுவலர் உங்களிடம் பேசி புதிதாக சில தள்ளுபடிகள் கொடுக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. Don’t over do it! “வேறு கம்பெனிக்கு மாறுவதாக இருந்தால் பரவாயில்லை, எப்போது போன் கனெக்ஷனை துண்டிக்க வேண்டும்?” என்று கேட்டு விடுவார்கள்.

இந்த உத்தி இலங்கையில் உதவாது. Dialog ஆட்களை கூப்பிட்டு Airtelக்கு மாறப்போவதாக சொன்னால், கொஞ்சம் கூட அசர மாட்டார்கள்!

எந்த ஹோட்டலுக்கு போனாலும், சூப்பர் மார்க்கெட்டுக்கு போனாலும் “இப்போது நிச்சயமாக ஏதாவது promotional offer உங்களிடம் இருக்குமே?" என்று விசாரியுங்கள். பெரும்பாலான நேரங்களில் நிச்சயமாக விலை தள்ளுபடி கிடைக்கும் என்று டோபிள் என்ற நிபுணர் கூறுகிறார். இவர் “Savvy Discounts” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் முழுதும் பேரம் பேசும் உத்திகள் பற்றி தான்! http://www.savvy-discounts.com/ submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post.html"

8 comments:

Unknown said...

// Dialog ஆட்களை கூப்பிட்டு Airtelக்கு மாறப்போவதாக சொன்னால், கொஞ்சம் கூட அசர மாட்டார்கள்!//

அது தானே...
இலங்கையில இந்த விளையாட்ட சரிவராது...

என்னட்ட கடனட்டை ஏதும் இல்ல எண்ட படியா நான் உதுகளப் பற்றி கவலைப்படத் தேவையில்ல...
ஹி ஹி...

தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா...

Admin said...

நல்ல தகவல்கள்... பகிர்வுக்கு நன்றிகள்

Atchuthan Srirangan said...

சந்ரு அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//என்னட்ட கடனட்டை ஏதும் இல்ல எண்ட படியா நான் உதுகளப் பற்றி கவலைப்படத் தேவையில்ல...
ஹி ஹி...//

கோபி பச்சிளம் பாலகர்க்கு கடனட்டை கொடுக்கப்படமாட்டாது

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல பதிவு - டயலொக் கதை உண்மைதான் - அவர்களுக்கு தங்கள் “சேவிஸ்” மீது அவ்வளவு நம்பிக்கை - உண்மையாகவே எனது அனுபவத்தில் இலங்கையிலுள்ள மற்ற மொபைல் வழங்குனர்களை விட டயலொக் சேவிஸீம் தரமும் மிகச் சிறந்தது - உயர்ந்தது (அட விலையும் தான்!).

இது போன்ற பயனுள்ள பதிவுகள் பலதை எதிர்பார்க்கின்றேன்.

Atchuthan Srirangan said...

அஷோக்பரன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி,நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய எழுதுவேன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அச்சு...

பதிவு நல்லாயிருக்கு. இவ்வளவு நாளும் நீங்க போடுற பதிவுகளை வாசிச்சாலும் என்னத்த பின்னூட்டமா போடுறது எண்டு குழப்பம்... ஹீ ஹீ..

உப்பிடித்தான் பெற்றாவில பேரம் பேசி அநியாயத்துக்கு நல்ல பை ஒன்றை விட்டுட்டு வந்துட்டன்.

//என்.கே.அஷோக்பரன் said...

இது போன்ற பயனுள்ள பதிவுகள் பலதை எதிர்பார்க்கின்றேன்.//

அப்ப இதுவரை போட்டது??.. ஹீ ஹீ.. அச்சுட பதிவுகளை எத்தினை பேர் நகலெடுத்து வாழுறானுகள்...

Atchuthan Srirangan said...

//பதிவு நல்லாயிருக்கு. இவ்வளவு நாளும் நீங்க போடுற பதிவுகளை வாசிச்சாலும் என்னத்த பின்னூட்டமா போடுறது எண்டு குழப்பம்... ஹீ ஹீ..//

மது அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

//உப்பிடித்தான் பெற்றாவில பேரம் பேசி அநியாயத்துக்கு நல்ல பை ஒன்றை விட்டுட்டு வந்துட்டன்.//

நீங்களாவது நல்ல பைக்கு,ஆனால் சிலர் எது ஏதற்கோ பேரம் பேசுவர்கள்.

//அச்சுட பதிவுகளை எத்தினை பேர் நகலெடுத்து வாழுறானுகள்...//

அந்தக் காலத்திலேயே போலிகள் இருந்தனர் என்றால் இந்தக் கலிகாலத்தில் கேட்கவா வேண்டும், எனவே நாம்தான் கவனமாக இருந்து உண்மையையும் போலியையும் கண்டு கொள்ள வேண்டும். இந்தப் போலிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்