Monday, 26 July 2010

* புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்

எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.

இரண்டு வருடங்களாக வேலையின்றி அரசு கொடுக்கும் நன்மைகளைப் பெற்று வாழ்ந்து வந்த பிரித்தானிய இளைஞர் 23 வயதான மார்க் வீல்டன். அரசு அளிக்கும் நன்மைகளிலேயே வாழத் தொடர விரும்பாத இவர் நேற்று புதிய உத்தி ஒன்றை கடைப்பிடித்தார். பலரும் பயணிக்கக் கூடிய சாலையில் " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டார்.

மிக வேகமான பணி நேரத்தில் அந்த சாலையில் சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் இதைக் கவனித்தனர். மழையையும் பொருட்படுத்தாது அந்த இளைஞர் நின்றது அனைவராலும் பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த பின் அந்த வழியே வாகனத்தில் சென்ற மரவேலைகள் தொடர்பான நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மார்க் வீல்டனிடம் நேர்காணல் நடத்தி 20 நிமிடங்களுக்குப் பின் அவருக்கு பணி நியமனமும் அளித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_26.html"

Friday, 23 July 2010

* அரசாங்க செலவுக் குறைப்பால் பிரித்தானியாவில் குற்றச் செயல்கள் பெருக வாய்ப்பு

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் செலவீனக் குறைப்புக்களும்
,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு துறைகளையும் போலவே காவல்துறைக்கு நிதி அளித்து வரும் உள்துறையிலும் 25 சதவீத செலவீனக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையில் அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம் 12 சதவீத நிதியை சேமிக்க முடியும் என்றும் 25 சதவீத குறைப்பு என்பது மிகவும் அதிகப்படியானதால் காவலர்கள் திறமையுடன் பணியாற்ற முடியாத சூழல்கள் ஏற்படுவதோடு குற்றங்கள் பெருகும் என எச்சரித்துள்ளார் சர் டெனிஸ் ஒ கொன்னோர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் அரசும் , உள்துறை அமைச்சகமும் இணைந்து காவல்துறையில் செலவை குறைப்பதை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_23.html"

Thursday, 22 July 2010

* அமெரிக்காவில் 7 மாதங்களில் 90 வங்கிகளுக்கு மூடு விழா

பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிபிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலை யையும் ஏற்படுத்தியது.

நிதிப் பிரச்னையை சமாளிக்க முடியாமல், ஏராளாமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நஷ் டத்தில் இயங்கி வருகின்றன; பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அரசு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தபோதும், நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்படுகின்றன.கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 9.5 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. நிதிப் பிரச்னை, வேலையிழப்பு போன்ற காரணங்களால் வங்கிகளும் தள்ளாடத் துவங்கிவிட்டன.

மிகப் பெரிய வங்கிகள் தவிர, நடுத்தர மற்றும் மூன்றாம் நிலை வங்கிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, ஐடியல் பெடரல் சேமிப்பு வங்கி போன்றவை கடந்த மாதத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கின. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார மந்த நிலை சீராகும் பட்சத்தில் தான், அமெரிக்காவில் வங்கிகளின் நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பும். வங்கிகளின் நடைமுறைகளில் ஏற்பட்ட பாதிப்பு இந்த மூடலுக்கு காரணம் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/7-90.html"